விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ருதி நாராயணன். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் இவரது ஆபாச வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஸ்ருதி நாராயணன் வீடியோ:

பட வாய்ப்பிற்கான ஆடிஷனாக அந்த ஆபாச வீடியோ இருந்ததாக தகவல் வெளியானதை அடுத்து, நடிகை ஸ்ருதி நாராயணன் இந்த வீடியோ விவகாரத்தில் தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில், நடிகை ஸ்ருதி நாராயணன் ஹீரோயினாக நடித்துள்ள கட்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

அந்த குரலுக்குச் சொந்தக்காரர் இவர்தானா?

ஸ்ருதி நாராயணனின் ஆபாச வீடியோவில் ஒரு ஆண் குரல் ஸ்ருதி நாராயணனிடம் பேசுவதாகவும், அந்த குரலுக்குச் சொந்தக்காரர் யார்? என்றும் கேள்வி எழுந்தது. இந்த நிலையில், நேற்று நடந்த கட்ஸ் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஷிவானி செந்திலே அந்த வீடியோவில் ஸ்ருதி நாராயணனிடம் பேசியவர் என்று தற்போது இணையவாசிகள் தகவல் பரப்பி வருகின்றனர்.

ஏனென்றால், அந்த வீடியோவில் இருந்த அந்த ஆணின் குரலும், இந்த தயாரிப்பாளர் ஷிவானி செந்திலின் குரலும் ஒன்றாக இருப்பது போலவும் இணையவாசிகள் தகவல் தெரிவித்து வருகின்றனர். இந்த ஷிவானி செந்தில் கார்கில், டேக் டைவர்சன் மற்றும் முடிவில்லா எண்ணங்கள் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

ரசிகர்கள் அதிர்ச்சி:

ஸ்ருதி நாராயணன் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையை அதிர வைத்த நிலையில், தற்போது அந்த வீடியோவில் ஸ்ருதி நாராயணனுடன் பேசும் நபர் ஷிவானி செந்தில் என்று இணையத்தில் பரவும் தகவல் மேலும் அதிர்ச்சியை அடையவைத்துள்ளது. அதேசமயம் அந்த வீடியோ ஏஐ என்றும், அந்த வீடியோவில் உள்ள குரல் ஏஐ தொழில்நுட்பத்துடன் பேசுவது போல அமைக்கப்பட்டுள்ளது என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த பிறகு தனது ஆதங்கத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்திய ஸ்ருதி நாராயணன் தொடர்ந்து நடிப்பில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். ஸ்ருதி நாராயணன் நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் ரங்கராஜ் இயக்கியுள்ளார். அவரே இந்த படத்தை தயாரித்திருப்பதுடன், அவர் இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் முன்னணி நடிகை ஸ்ரீலேகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.