தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு பிறந்ததால் சிகப்பு பட்டு உடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்கி அருள்பாலித்த கள்ளழகர்.

250 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேதர ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் உற்சவம் நடைபெற்றது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேதர ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.கோவிலில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொட்டகுடியாற்றில் இன்று கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் சிகப்பு பட்டுடுத்தி ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது.

மற்ற வைணவ கோயில்கள் போல் இல்லாமல் ஸ்ரீரங்கம் வைதீக முறைப்படி தமிழ் புத்தாண்டு இந்த வருடம் செவ்வாய்க்கிழமை பிறந்ததால் செவ்வாய்க்கு உகந்த சிகப்பு பட்டுடுத்தி கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் கொட்ட குடி ஆற்றில் இறங்கிய வைபவம் நடைபெற்றது.போதிய மழையின்மை காரணமாக நீர் வறண்டு போன நிலையில் திடீரென பெய்த மழை காரணமாக குறைவான தண்ணீரே இருந்த காரணத்தினால் சம்பிரதாயத்திற்காக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தீப்பந்தம்ஏந்தி சாட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் தேனி அருகே உள்ள உப்புக்கோட்டை மற்றும் உப்பார்பட்டியில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் முல்லை ஆற்றும் கரையில் இரு ஊரைச் சேர்ந்த கள்ளழகர் அங்கு அமைக்கப்பட்டு இருந்த பந்தலில் வைக்கப்பட்டிருந்தனர். இதில் இரு ஊரைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சுவாமிக்கு அர்ச்சனை செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து மாலை 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி குச்சனூர்விளக்கு, மறவர் சாவடி, பச்சையப்பா துவக்கப்பள்ளி தெரு, கடைவீதி தெரு உள்ளிட்ட முக்கிய சாலை வழியாக ஊர்வலம் நடைப்பெற்றது. முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று முல்லை பெரியாற்றில முளைப்பாரிகளைகரைத்தனர். பின் முல்லை பெரியாற்றில் ஆற்றங்கரையில் இருந்த உப்பார்பட்டி கள்ளழகர் சுவாமியை உப்பு கோட்டையை சேர்ந்த பொதுமக்கள் வழி அனுப்பி வைத்தனர். சாமியை உப்பார்பட்டியில் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் வான வேடிக்கை மேளதாளத்துடன் அழைத்துச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து உப்புக்கோட்டை கள்ளழகரை இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஆட்டத்துடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து, மூலஸ்தானத்தில் கோவிலுக்கு கள்ளழகரை அழைத்து வந்தனர். மேலும், பக்தர்கள் ”கோவிந்தா கோவிந்தா” எனகோஷமிட்டு வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.