<p>பயங்கரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் நினைவை போற்றும் விதமாக வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட இருக்கிறது. முகுந்த் வரதராஜனின் வீடு தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு தாம்பரம் பகுதியில் இருந்து வருகிறது. முகுந்த வரதராஜனின் பெற்றோர்கள் இந்த வீட்டில் வசித்து வருகிறார்கள். தாய் நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த முகுந்த் வரதராஜனுக்கு இந்திய அரசின் உயரிய விருதான அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது. தற்போது வேளச்சேரி முதல் தாம்பரசம் வரை அமைந்துள்ள 16 கிலோமீட்டர் சாலைக்கு மேஜர் முகுந்தின் பெயர் வைக்க தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது . முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/entertainment/peddi-heroine-janhvi-kapoor-photos-263030" width="631" height="381" scrolling="no"></iframe></p>