வேலைவாய்ப்பற்ற இளைஞர்களே.... மே 30 கடைசி நாள்.. எதற்கு தெரியுமா?

8 months ago 9
ARTICLE AD

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவுசெய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பத்திற்கான தகுதிகள்

31.03.2025 அன்றைய தேதியில் ஐந்து ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும்.

முறையாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்திருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று அல்லது மேல்நிலை வகுப்பு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் தகுதியானவர்கள்.

மாற்றுத்திறனாளி

மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று அல்லது மேல்நிலை வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து 31.03.2025 அன்றைய தேதியில் ஓராண்டு முடிந்த பதிவுதாரர்கள்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானம் மற்றும் வயதில் உச்ச வரம்பு ஏதுமில்லை

பதிவுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் பயில்பவராக இருக்கக்கூடாது.

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TVK Vijay: கச்சத்தீவு விவகாரம்.. திமுகவின் அந்தர் பல்டி. இந்த நாடகம் ஏன்?.. . மீண்டும் அரசை தாக்கிய விஜய்

உதவித்தொகை விவரம்

பொதுப்பிரிவினர்: மாதம் ஒன்றிற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியின்மை எனில் 200 ரூபாயும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி எனில் 300 ரூபாய், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி 400 ரூபாய் , பட்டப்படிப்பு தேர்ச்சி எனில் 600 ரூபாய் 3 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

அனைத்து வகை மாற்றுத்திறனாளிக்கும் மாதம் மாதம் உதவித்தொகை

பத்தாம் வகுப்பு தேர்ச்சியின்மை மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி எனில் 600 ரூபாய் , மேல்நிலை வகுப்பு தேர்ச்சி எனில் 750 ரூபாய் , பட்டப்படிப்பு தேர்ச்சி எனில் 1000 ரூபாய் ஒவ்வொரு மாதமும் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

உதவித்தொகைக்கு தகுதியற்றவர்கள்

ஏற்கனவே மூன்றாண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள்.

பொறியியல், மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழில் சார்ந்த பட்டப் படிப்புகள் முடித்தவர்கள்.

அரசுப்பணியில் உள்ளவரோ, தனியார் துறையில் ஒரு முறையாவது பணியில் சேர்ந்து ஊதியம் பெற்றவர்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுபவர்கள் மற்றும் அரசின் எந்த ஒரு திட்டத்திலும் உதவித்தொகை பெறுபவர்களும் தகுதியற்றவர்கள்

தேவையான ஆவணங்கள்

வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை

பள்ளி, கல்லூரிகளின் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச்சான்றிதழ்

குடும்ப அட்டை

ஆதார் அட்டை

வங்கிக் கணக்கு புத்தகம்

சாதிச்சான்றிதழ்

தேசிய மயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் தங்கள் பெயரிலுள்ள வங்கி கணக்குப்புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியுடைய பதிவுதாரர்கள், 2வது தெரு, பாலாஜி நகர், பூம்புகார் சாலை, மயிலாடுதுறை-1 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் வருகைபுரிந்து இலவச விண்ணப்பப்படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். மேலும், https://tnvelaivaaippu.gov.in/download.html என்ற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்யும் பட்சத்தில் 04364-299790 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை கட்டாயம் தொடர்புகொண்டு உரிய அறிவுரை பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பத்தை 30.05.2025-க்குள் சமர்ப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Read Entire Article