வேலை நிறுத்தம் தொடரும் – கோவை ஆட்சியரகம் முன் வருவாய்த்துறை அலுவலர்கள் அறிவிப்பு

1 month ago 5
ARTICLE AD
<p>சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும், &nbsp;வரையறுக்கபட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் &nbsp;உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஆட்சியரகம் முன் வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p> <p>சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதை &nbsp;ரத்து செய்து மீண்டும் 25 சதவீதம் நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி &nbsp;தமிழ்நாடு முழுவதும் வருவாய் துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p> <p>கோவை &nbsp;ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலர்கள் பந்தல் அமைத்து வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அரசு தங்களின் கோரிக்தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். &nbsp;தங்களது கோரிக்கைகளை பல மாதங்களாக வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் &nbsp;தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றாவிடில் போராட்டம் தொடரும் எனவும் தமிழக அரசுக்கு வருவாய்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.</p>
Read Entire Article