வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி

1 year ago 7
ARTICLE AD
<p>ஆந்திரப் பிரதேசத்தின் பல்நாடு மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.&nbsp;</p> <p>அத்தங்கி-நார்கட்பள்ளி நெடுஞ்சாலையில் சனிக்கிழமையன்று, தெலுங்கானாவில் உள்ள கொண்டகட்டு ஆஞ்சநேயசுவாமி கோயிலில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வாகனம் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது, அங்கு பயணிகள் தங்கள் புதிய காருக்கு பூஜை செய்யச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.</p> <p>&ldquo;கொண்டகட்டு ஆஞ்சநேயசுவாமி கோவிலில் வழிபாடு செய்துவிட்டு, தங்கள் சொந்த கிராமமான சிரிபுரம் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது,&rdquo; என்று பிடுகுரல்லா கிராமப்புற நிலைய சப் இன்ஸ்பெக்டர் மோகன் தெரிவித்தார்.</p> <p>காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அதிவேகமே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர்.</p>
Read Entire Article