வெள்ளை நாயகிக்கு ஏன் கருப்பு நிற மேக்கப் ?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றுள்ளது. ஆனால் இப்படம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வெள்ளை நிற நாயகிகளுக்கு ஏன் கருப்பு நிறத்தில் மேக்கப் போட்டு நடிக்கவைக்க வேண்டும் கருப்பு நிற நடிகையையே நடிக்க வைத்திருக்கலாமே என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து தற்போது பைசன் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் பதிலளித்துள்ளார் .

மாரி செல்வராஜ் விளக்கம்

" வெள்ளையான நாயகிகளுக்கு கருப்பு நிற மேக்கப் போட்டு நடிக்க வைப்பது என்பது ஒரு சாய்ஸ் தான். அப்படி பார்த்தால் மாற்றுதிறனாளி கதாபாத்திரத்தில் உண்மையான மாற்றுத்திறனாளியை நடிக்க வைத்து துன்புறுத்த முடியுமா ? நாங்க ஒருத்தர் வெள்ளையாக அழகாக இருக்காங்க என்று நடிக்க வைப்பதில்லை. யாருக்கு அர்பணிப்பு இருக்கோ , யார் கதைக்காக என்ன வேணா செய்ய தயாரா இருக்கிறார்களோ அவர்களை தான் தேர்வு செய்கிறோம்." என மாரி செல்வராஜ் விளக்கமளித்துள்ளார்