வெள்ளை அறிக்கை.. திமுக பின்னால் ஓடி ஒளியாதீர்கள்.. விஜயை கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார்!

4 months ago 10
ARTICLE AD

மக்களை வெள்ளை அறிக்கை மூலம் ஏமாற்றாமல் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசின் நிதியமைச்சர் மரிய வில்சன் தமிழ்நாட்டின் பொருளாதார நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையை நேற்று வெளியிட்டார். அதில், “தமிழ்நாடு அரசின் கடன் மொத்தமாக ரூ.13.18 லட்சம் கோடி உள்ளது. 2021-26 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ரூ.4.87 இலட்சம் கோடி கடன் பெறப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த ஐந்தாண்டு கால கடனானது. மாநிலம் தனது முதல் 60  ஆண்டு காலத்தில் வாங்கிய கடனை விட அதிகமாகும். முந்தைய திமுக அரசு வருவாயைப் பெருக்காமல் மகளிர் உரிமைத்தொகை திட்டம், பயிர்க்கடன் தள்ளுபடி, விடியல் இலவச பயணம், பள்ளி கல்லூரி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை என 2025-2026 நிதியாண்டில் செலவினம் மட்டும் ரூ.25 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு வட்டியாக மட்டும் ரூ.67 ஆயிரம் கோடி கட்டி வருகிறது. ஒவ்வொரு தனிமனிதர் மீதும் ரூ.1.28 லட்சம் கடன் இருப்பதாகவும் கணக்கிடப்பட்டிருக்கிறது. அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது. பல துறைகளில் நடந்த ஊழல் காரணமாக கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வட்டி விகிதம் மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 61 சதவிகிதம் ஏறியுள்ளது என நிதியமைச்சர் மரிய வில்சன் விளக்கம் கொடுத்தார்.

ஜெயக்குமார் தவெக அரசு மீது கடும் விமர்சனம்

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வெள்ளை அறிக்கை மூலம் மக்களை ஏமாற்றாமல் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். ஜூன் 18 ஆம் தேதி சட்டமன்றம் கூடும் நிலையில் அவசர அவசரமாக வெள்ளை அறிக்கையை வெளியிட்டது ஏன்?

Also Read: கடனாளி மாநிலமான தமிழ்நாடு.. தப்பிக்கவே வெள்ளை அறிக்கை.. தவெகவை விமர்சித்த தங்கம் தென்னரசு!

தமிழ்நாட்டில் தற்போது நிலவும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை திசை திருப்பவா? .. மாற்றத்தை எதிர்பார்த்து  ஏமாற்றமடைந்த தமிழக மக்களுக்கு தவெக அரசின் மீது உண்டான  வெறுப்பை திசை திருப்பவா?  அல்லது இந்த வெற்று (வெள்ளை) அறிக்கையின் மூலம் அள்ளிக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று மறைமுகமாக தமிழக மக்களுக்கு தெரிவிக்கிறாரா முதல்வர்?

திமுக அரசால் உருவாக்கப்பட்ட நிதிச்சுமையை சுட்டிக்காட்டுவதை  தாண்டி, அதை சரி செய்வதற்கு தங்களிடம் இருக்கும் வழிகள் என்ன? கடன் வாங்குவதை தொடர்ந்தபடியே நிதி நிலைத்தன்மையை  உறுதி செய்ய உங்களிடம் உள்ள திட்டம் என்ன? தொடர்ந்து திமுக வின் தவறுகளுக்குள் ஒளிந்து கொள்ளாமல் மக்களுக்கான அரசியலை செய்யுங்கள்.ஆச்சரியக்குறி என்று சொல்லி கொள்ளும் அரசின் செயல்பாடுகள் அனைத்தும் கேள்விக்குறியாகவே உள்ளது” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

Read Entire Article