சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே சிறுத்தை தாக்கியதில் 5 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூர் அருகே கொளத்தூர் அடுத்த பாலமலை, கண்ணாமூச்சி, காவலண்டியூர், கொசவன்கரடு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த பகுதியில கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடு, ஆடு உள்ளிட்டவற்றை சிறுத்தை வேட்டையாடிக் கொன்றது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஊருக்குள் அடிக்கடி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிறுத்தை நடமாட்டத்தை வீடியோ எடுத்து வனத்துறையினருக்கு அனுப்பி வைத்தனர். சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கண்ணாமூச்சி அடுத்த செ.காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் விவசாயி சரோஜா(60), என்பவர் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று வந்த பிறகு பட்டியில் அடைத்து வைத்திருந்தார். இதனிடையே, நேற்று காலை எழுந்து வந்த பார்த்த போது சிறுத்தை தாக்கியதில் பட்டியில் இருந்து 5 வெள்ளாடுகள் உயிரிழந்து கிடந்தன. ஒரு ஆட்டை சிறுத்தை தூக்கி சென்ற நிலையில், 2 ஆடுகள் பலத்த காயமடைந்தன. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்கு பிறகு அடக்கம் செய்தனர்.

மேட்டூர் வட்டாசியர் செந்தில்குமார், வனச்சரக அலுவலர் செங்கோட்டையன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். கொளத்தூர் காவல் ஆய்வாளர் மஞ்சுநாதன் மூதாட்டி சரோஜாவுக்கு ரூ 10,00 நிதியுதவி வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “இப்பகுதியில் சிறுத்தை கால்நடைகளை வேட்டையாடி வரும் சம்பவம் தொடர்கையாகி வருகிறது. விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் நஷ்டம் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து இறந்து போன ஆடுகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும், சிறுத்தை மனிதர்களை தாக்கும் முன்பு வனத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சிறுத்தை கண்டுபிடித்து ஊருக்குள் புகாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர்.