வெளிநாட்டுக்கு புறப்படும் சூர்யா மகள் தியா? எந்த நாட்டுக்கு... ஏன் தெரியுமா?

7 months ago 5
ARTICLE AD

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் நடித்து கடந்த ஆண்டு வெளியான 'கங்குவா' திரைப்படம் கலவையான விமர்சனங்களோடு, தோல்வியை சந்தித்த நிலையில், மே 1-ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் ஆன, 'ரெட்ரோ' தொடர்ந்து ரூ.235 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது.

பட்ஜெட்டை விட, பல மடங்கு 'ரெட்ரோ' வசூல் செய்துள்ளதால் நடிகராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் சூர்யா - ஜோதிகா இருவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். அடுத்ததாக சூர்யா இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45-ஆவது படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து போஸ்ட் புரோடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதை தவிர, சூர்யா தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கும் படம் பூஜையோடு துவங்கி உள்ளது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ நடிக்க உள்ளார். சூர்யா ஒரு பக்கம் திரைப்படங்களில் பிசியாக நடித்து வருவது போல் ஜோதிகாவும், ஹிந்தி படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

கடந்த ஆண்டு இவர் நடிப்பில் ஹிந்தியில் ரிலீஸ் ஆன சைத்தான் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, 'டப்பா கார்டெல்' என்கிற வெப் தொடரிலும் நடித்திருந்தார். அடுத்தடுத்த சில படங்களில் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தார் சூர்யா - ஜோதிகா இருவரும் தங்களின் மகளுக்காக தேம்பி தேம்பி அழுத்த தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யாவின் மகள் தியா, மும்பையில் தற்போது +2 படித்து முடித்துள்ள நிலையில், மேல் படிப்புக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தாராம். மேலும் தியாவுக்கு தற்போது அமெரிக்காவில் அவர் சேர்ந்து படிக்க நினைத்த கல்லூரியில் இடம் கிடைத்து விட்டதால்... ஜூலை மாதம் அங்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இத்தனை ஆண்டுகள், கூடவே இருந்த மகள் படிப்புக்காக வெளிநாடு செல்வதை தாங்க முடியாமல் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும், தேம்பி தேம்பி அழுததாகவும். தியாவை பிரிந்து இருக்க போவதை நினைத்து குடும்பமே தற்போது சோகத்தில் உள்ளதாம்.

Read Entire Article