தஞ்சாவூர்: மாதம் ரூ. 86 ஆயிரம் சம்பளம் கிடைக்குமாம்... செவிலியர்களுக்கு அடிச்சு இருக்கு ஒரு சூப்பர் சான்ஸ். உடனே விண்ணப்பிங்க. என்ன விஷயம் தெரியுங்களா? தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவங்க மிஸ் பண்ணிடாதீங்க. அப்புறம் வருத்தப்படுவீங்க.

தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், பூட்டான் சுகாதார அமைச்சக மருத்துவமனைகளில் பணியாற்ற செவிலியர்களைத் தேர்வு செய்கிறது. அனுபவத்திற்கேற்ப ரூ.65,000 முதல் ரூ.86,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டங்கள் தோறும் தனியார் நிறுவன வேலை வாய்ப்புகளை உருவாக்கி தந்துள்ளது.

நம் மாவட்ட வாலிபர்கள், இளம் பெண்களுக்கு வெளிநாட்டில் சென்று வேலை பார்க்க வேண்டும் என்பது மிக பெரிய கனவாக உள்ளது. இதில் எவ்வித ஏமாற்றமும் அடையக்கூடாது என்பதற்காக தமிழக அரசு வெளிநாடு சென்று பணிபுரிய விருப்பப்படுபவர்களுக்காகவும் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பூட்டானில் உள்ள மருத்துவமனையில் பணியாற்ற செவிலியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அருமையான வேலை வாய்ப்பு இது. மிஸ் செய்திடாதீங்க.

இது தொடர்பாக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பூட்டான் சுகாதார அமைச்சக மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் பி.எஸ்.சி., நர்சிங்கில் தேர்ச்சி பெற்று 23 முதல் 45 வயதிற்குட்பட்ட ஆண்/பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.

மேற்படி, 2 முதல் 5 வருட பணி அனுபவமுள்ள பணியாளர்களுக்கு ரூ.65,000/-ஊதியமாகவும். 6 முதல் 10 வருட பணி அனுபவமுள்ளவர்களுக்கு 73,000/-ஊதியமாகவும், 10 வருடத்திற்கு மேல் பணி அனுபவமுள்ளவர்களுக்கு ரூ.86,000/-ஊதியமாகவும் வழங்கப்படும்.

இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைதளமான www.omcmanpower.tn.gov.in -ல் கண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஊதியம் மற்றும் பணி பற்றிய விவரங்களை www.omcmanpower.tn.gov.in மூலமாகவும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் (6379179200) (044-22502267)

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://forms.gle/JS2b341tf2tcpJn56 என்ற லிங்கில் தங்கள் சுய விவரங்களை பூர்த்தி செய்தும் கல்விச்சான்றிதழ், பாஸ்போட், அனுபவச்சான்றிதழ் ஆகியவற்றை
[email protected] என்ற இந்நிறுவனத்தின் மின்னஞ்சலுக்கு வரும் 03/11/2025-க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாட்கள் மிகவும் குறைவாக இருக்கு. தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இதை உடனே பயன்படுத்திக் கொள்ளுங்கள். அற்புதமான வாய்ப்பு.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்ட்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து கொண்டு இந்நிறுவனத்தின் மூலம் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். எனவே எவ்வித இடைத்தரகர் இல்லாமல் அருமையான வேலை வாய்ப்பை, திறமையும், தகுதியும் கொண்டு பெற்றிடுங்கள். அரசு அயல்நாட்டு நிறுவனமே ஏற்படுத்தி தரும் இந்த வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள். இன்னும் 3 நாட்கள்தான் இருக்கு. இப்பவே விண்ணப்பத்தை அனுப்பிடுங்கள். உங்களின் திறமைக்கும், அனுபவத்திற்கும் அருமையான வேலைவாய்ப்பாக இது அமையலாம். எனவே உடனே அப்ளை செய்யுங்கள். உங்கள் வெற்றி வாய்ப்பை இழந்து விடாதீர்கள்.