வெறும் ரூ 40,000க்கு கசியவிடப்பட்ட ராணுவ தகவல்கள்.. வசமாக சிக்கிய குஜராத் இளைஞர்

6 months ago 5
ARTICLE AD

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் கூறி குஜராத் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவரை குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இந்திய விமானப்படை, எல்லை பாதுகாப்பு படை தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தான் ஏஜென்டிடம் அந்த நபர் கசியவிட்டதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குஜராத் இளைஞர்:

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியைச் சேர்ந்தவர் சஹ்தேவ் சிங் கோஹில். இவருக்கு வயது 28. சுகாதார ஊழியராகப் பணியாற்றி வரும் இவர், பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவின் ATS) மூத்த அதிகாரி கே. சித்தார்த் கூறுகையில், "கடந்த 2023 ஆம் ஆண்டு, அதிதி பரத்வாஜ் என்று சொல்லி கொண்டு, சஹ்தேவ் சிங்கிடம் வாட்ஸ்அப் மூலம் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார்.

புதிதாக கட்டப்பட்ட அல்லது கட்டப்பட்டு வரும் உள்ள இந்திய விமானப்படை மற்றும் எல்லை பாதுகாப்பு படை தளங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவருக்கு சஹ்தேவ் சிங் அனுப்பியுள்ளார். அவர் பாகிஸ்தான் ஏஜென்டிடம் பிஎஸ்எஃப் மற்றும் ஐஏஎஃப் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

வெறும் ரூ 40,000க்கு கசியவிடப்பட்ட ராணுவ தகவல்கள்:

கடந்த மே 1 ஆம் தேதி, முதற்கட்ட விசாரணைக்காக சஹ்தேவ் சிங் அழைக்கப்பட்டார். அப்போது, பாகிஸ்தான் ஏஜென்ட், அவரிடம் IAF மற்றும் BSF தளங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் கேட்டிருப்பதை சிறப்பு அதிரடி படை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

கடந்த 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், தனது ஆதார் அட்டையை பயன்படுத்தி சஹ்தேவ் சிங் சிம் கார்ட் ஒன்றை வாங்கியுள்ளார். OTP உதவியுடன் அதிதி பரத்வாஜுக்கு அந்த எண்ணில் WhatsApp ஐ செயல்படுத்தினார். அதன் பிறகு, BSF மற்றும் IAF தொடர்பான அனைத்து புகைப்படங்களும் வீடியோக்களும் அந்த எண்ணில் பகிரப்பட்டன.

தகவல்களைப் பகிர்ந்து கொள்ள சஹ்தேவ் சிங் பயன்படுத்திய எண்கள் பாகிஸ்தானில் இருந்து இயக்கப்பட்டவை என்பது தடயவியல் பகுப்பாய்வில் தெரியவந்தது. இதற்காக, அடையாளம் தெரியாத ஒருவர் சஹ்தேவ் சிங்குக்கு ரூ. 40,000 ரொக்கமாகவும் கொடுத்துள்ளார்" என்றார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கு மத்தியில், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

சமீபத்தில், உளவு பார்த்த சந்தேகத்தின் பேரில் ஒரு யூடியூபர், ஒரு தொழிலதிபர், பாதுகாப்பு காவலர் உள்பட பத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக சஹ்தேவ் சிங் கைது செய்யப்பட்டார்.

Read Entire Article