வெயிலில் கேன் தண்ணீர் குடிக்கிறீங்களா ? உஷார்.. உணவு பாதுகாப்பு துறை அதிரடி எச்சரிக்கை

6 days ago 2
ARTICLE AD

குடிநீர் கேன் - வழிகாட்டு முறைகள் பின்பற்றப்படவில்லை

கோடை வெயில் காரணமாக கேன் குடிநீர் விற்பனை அதிகரித்து உள்ளது. பல இடங்களில் 20 லிட்டர் குடிநீர் கேன், 30 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் முறையான வழிகாட்டுதல்களை பின்பற்றி கேன் குடிநீர் விற்பனை செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக பல கடைகளில் குடிநீர் கேன்கள் வெளியே சூரிய ஒளி நேரடியாக விழும் இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. அதே போல், சுட்டெரிக்கும் வெயிலின் போது, வாகனங்களில் திறந்த வெளியில் குடிநீர் கேன்கள் எடுத்து செல்லப்படுகின்றன.

இவ்வாறான சூழலில், குடிநீர் கேன்களில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு, பிளாஸ்டிக் நுண்துகள்கள் குடிநீரில் கலந்து, உடலுக்கு பல்வேறு வகை பாதிப்பை ஏற்படுத்தும் என, உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது.

இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது ;

குடிநீரை பொருத்தவரை 1 லிட்டர் நீரில் கால்சியம் அளவு 10 முதல் 75 மி.கி., இருக்க வேண்டும். அதே போல், மெக்னீசியம் அளவு 5 முதல் 30 மி.கி., என்ற அளவில் இருப்பது கட்டாயம்.

குடிநீர் கேன்களில் சூரிய ஒளி விழும் போது, அந்நீரில் வேதியியல் மாற்றம் ஏற்படும். குறிப்பாக, கேன்களில் உள்ள 'பாலி கார்பனேட்' மற்றும் பிற ரசாயனங்கள் உருகி, தண்ணீரில் கலக்கும். பிளாஸ்டிக் ரசாயனங்கள் உடலில் அகச் சுரப்பி அமைப்பை பாதித்து, ஹார்மோன் மாற்றத்தை உருவாக்கும். மேலும், புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தவும் வழிவகுக்கும்.

வெயிலால், குடிநீரில் உள்ள டி.டி.எஸ்., என்ற நீரில் கலந்துள்ள தனிமம் அளவு குறைந்தால், எலும்பு தேய்மான பிரச்னையை ஏற்படுத்தும். ஒரு குடிநீர் கேனை, 30 முதல் 50 முறை மட்டுமே பயன்படுத்தலாம். கேன்களின் நிறம் மாறினால், பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

குடிநீர் கேனை வெயிலில் வைக்காமல், குளிர்ந்த அல்லது நிழலான பகுதிகளில் மட்டுமே வைக்க வேண்டும். இவ்விதிகளை பின்பற்றாத குடிநீர் கேன் விற்பனை செய்வோர் குறித்து , தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை செயலி மற்றும் https://www.foodsafety.tn.gov.inஎன்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம். அவர்களுக்கு, 5,000 ரூபாய் வரை அபராதம் விதிப்பதுடன் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும் என இவ்வாறு அவர்கள் கூறினர்.

Read Entire Article