விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட மணிகள் மற்றும் சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வரலாற்றில் புதிய வெளிச்சம் ஏற்பட்டுள்ளது

தொல்லியல் அகழாய்வுப் பணி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூன் 18-ம் தேதி தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் 2024-ஆம் ஆண்டிற்கான அகழாய்வுப் பணிகளின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளின் அறிவியல் அடிப்படையிலான பகுப்பாய்வு முடிவுகள் மூலம் தமிழ்நாட்டின் வரலாற்றில் புதிய வெளிச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழ்ச் சமூகமானது, கி.மு. 6-ம் நூற்றாண்டில் படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கரிமப் பகுப்பாய்வுகளின் முடிவுகள் வாயிலாக உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது.

- Maharashtra CM: தேவேந்திர பட்னாவிசுக்கு அடித்தது ஜாக்பாட்! மகாராஷ்டிரா முதலமைச்சராக நாளை பதவியேற்பு!

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சென்ற ஆண்டில் எட்டு இடங்களில் அகழாய்வு செய்ததைப் போன்று இவ்வாண்டியிலும் எட்டு இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது . அதன்படி,

1. கீழடி மற்றும் அதன் அருகிலுள்ள தொல்லியல் தளமான கொந்தகை, சிவகங்கை மாவட்டம் - பத்தாம் கட்டம் 2. வெம்பக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் மூன்றாம் கட்டம் 3. கீழ்நமண்டி, திருவண்ணாமலை மாவட்டம் இரண்டாம் கட்டம் 4. பொற்பனைக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் இரண்டாம் கட்டம் 5. திருமலாபுரம், தென்காசி மாவட்டம் - முதல் கட்டம் 6. சென்னானூர், கிருஷ்ணகிரி மாவட்டம் - முதல் கட்டம் 7. கொங்கல்நகரம், திருப்பூர் மாவட்டம் முதல் கட்டம் 8. மருங்கூர், கடலூர் மாவட்டம் - முதல் கட்டமாகும் இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட மணிகள், மற்றும் சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சங்கு வளையல் கிடைத்துள்ளது

விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம் மூன்றாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. அகழாய்வில் இதுவரை சூது பவளம், தங்க நாணயம், செப்பு காசுகள், உடைந்த நிலையிலுள்ள சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள்,வட்ட சில்லு, பழமையான கற்கள் உள்ளிட்ட 2800க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தோண்டப்பட்ட அகழாய்வு குழியில் சுடுமண்ணால் ஆன இருவேறு அலங்கரிக்கப்பட்ட மணிகள், மற்றும் சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முன்னோர்கள் சுடுமண் மணியை அணிகலன்களாக பயன்படுத்தி இருக்கலாம் எனவும் சங்கு வளையல் தொழில் கூடம் இருந்ததற்கான கூடுதல் சான்றாக சங்கு வளையல் கிடைத்துள்ளதாக அகழாய்வு தள இயக்குநர் பொன்பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sukhbir Singh Badal: நாடே பதற்றம் - பொற்கோயில் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு, முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங்கிற்கு என்னாச்சு?

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - "ஆட்டத்தை ஆரம்பிக்கும் அஜித்.. முடிச்சு வைக்கப்போகும் விஜய்" இப்படித்தான் இருக்கப்போது 2025!