வெடித்து சிதறிய ஏசி.. ஒரே நாளில் இரு சம்பவங்கள்.. 3 பேர் பலி ஐவர் காயம் நடந்தது என்ன?

3 months ago 6
ARTICLE AD

டெல்லியில் உள்ள ஒரு உணவு விற்பனை நிலையத்தில் நேற்று இரவு ஏர் கண்டிஷனர் கம்ப்ரசர் வெடித்ததில் ஐந்து பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

டெல்லி ஏசி வெடிப்பு:

வடகிழக்கு டெல்லியின் யமுனா விஹாரில் உள்ள ஒரு உணவு விற்பனை நிலையத்தில் திங்கள்கிழமை இரவு ஏர் கண்டிஷனர் கம்ப்ரசர் வெடித்ததில் ஐந்து பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு கட்டிடத்தின் தரை தளத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாகவும், அதைத் தொடர்ந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் டெல்லி தீயணைப்பு சேவை (DFS) தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக GTB மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வெடிப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக DFS மேலும் தெரிவித்துள்ளது.

ஃபரிதாபாத் ஏசி வெடிப்பு

இதே போல் கிரீன் ஃபீல்ட் காலனியில் உள்ள வீட்டில் ஏர் கண்டிஷனர் கம்ப்ரசர் வெடித்ததில் ஒரு தம்பதியினர் மற்றும் அவர்களது  மகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் இறந்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.

நான்கு மாடி அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் அதிகாலை 3 மணியளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவமானது நிகழ்ந்தது. பலியானவர்கள் சச்சின் கபூர் (49), அவரது மனைவி ரிங்கு கபூர் (48) மற்றும் அவர்களது மகள் சுஜ்ஜைன் (13) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் அவர்களின் செல்ல நாயும் இறந்தது.

இந்த தம்பதியினரின் மூத்த மகன் ஆர்யன் கபூர் (24), பால்கனியில் இருந்து குதித்த பிறகு உயிர் தப்பினார். அவரது கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குடும்பத்தினர் கூரைக்கு தப்பிச் செல்ல முயன்றதாகவும், ஆனால் கதவு பூட்டப்பட்டிருந்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். வெடித்த ஏசியில் இருந்து தொடங்கிய தீயிலிருந்து புகை தரையை சூழ்ந்து குடும்பத்தினர் சிக்கிக் கொள்ள காரணமாக அமைந்தது .

"ஏசி கம்ப்ரசரில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக, கட்டிடம் முழுவதும் புகை பரவியதாக எங்களுக்குத் தெரியவந்தது. வீட்டில் நான்கு பேர் இருந்தனர், மூன்று பேர் இறந்தனர்," என்று பக்கத்து வீட்டுக்காரரான ஷாலினி கூறினார். இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article