வெங்கட் பிரபு

கமர்சியன் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரூட்டில் பயணித்து வருபவர் இயக்குநர் வெங்கட் பிரபு. சென்னை 28 , சரோஜா , கோவா என பெரிய ஸ்டார்கள் இல்லாமலே ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களையும் சம்பாதித்திருக்கிறார். மாநாடு படத்தின் மூலம் சிம்புவுக்கு செமையான கம்பேக் கொடுத்தார். கடந்த ஆண்டு விஜயின் தி கோட் படத்தை இயக்கினார். 2024 ஆம் ஆண்டில் அதிக வசூல் ஈட்டிய தமிழ் படமாக இடம்பிடித்தது தி கோட். அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் படத்தை இயக்கவிருப்பதாக வெங்கட் பிரபு தெரிவித்திருந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார் நடிகர் வைபவ்

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு காம்போ டிலே ?

தி கோட் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தது பெரியளவில் பேசப்பட்டது. சிவகார்த்திகேயனிடம் கதை சொல்லி இருப்பதாகவும் தனது அடுத்த படம் அவருடன் தான் என வெங்கட் பிரபு தி கோட் பட ரிலீஸின் போது தெரிவித்திருந்தார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எஸ்.கே வெங்கட் பிரபு காம்போவை ரசிகர்கள் மிக ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் வெங்கட் பிரபு பட செட்டைச் சேர்ந்த நடிகர் வைபவ் புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

" நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைபவ் " சிவகார்த்திகேயன் படம் பண்ணும் வரை வெங்கட் பிரபு ஃப்ரீயாதான் இருக்கார். அதனால் நாங்கள் அவர் அலுவலகத்தில் சென்று கோவா 2 அல்லது சரோஜா 2 படம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். " என தெரிவித்துள்ளார். பெரிய பட்ஜெட் ஏதும் இல்லாமல் சிறிய நடிகர்களை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய படம் கோவா. முழுக்க முழுக்க யூத் காமெடி நிறைந்த இந்த படம் இளைஞர்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது

சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்றது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது. அதர்வா , ரவி மோகன் , ஶ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார்.