வெகு விமரிசையாக நடைபெற்ற சித்திரைத் திருத்தேரோட்டம்!..பழனி கோயிலில் பக்தர்கள் உற்சாகம் !..

1 month ago 7
ARTICLE AD

உலகத் தமிழர்களின் முதற்கடவுள் முருக பெருமான் எனவும், தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆன்மீக ஸ்தலமாக விளங்குகிறது பழனி முருகன் கோயில். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும். உலகப்புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தாங்கள் வேண்டிய நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயிலான லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை திருத்தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. நான்கு ரத வீதிகளிலும் நடைபெற்ற இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இக்கோயிலில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரைத் திருவிழா தொடங்கியது.

11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் தொடக்கத்திலிருந்து தினமும் தம்பதி சமேதராக லட்சுமி நாராயணப் பெருமாள் மரச்சப்பரம், சேஷவாகனம், தங்கக்குதிரை வாகனம், அனுமார் வாகனம், சிம்மவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரதவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து இன்று காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது. காலை நேரத்தில் தம்பதி சமேதராக லட்சுமி நாராயணப் பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் தோள்கன்னியில் எழுந்தருளி திருத்தேரேற்றம் செய்யப்பட்டது.

காலை 8 மணியளவில் அருள்மிகு லட்சுமி சமேத நாராயணருக்கு சிறப்பு அர்ச்சனைகள், தீபாராதனைகள் நடைபெற்ற பின்னர் தேரோட்டம் தொடங்கப்பட்டது. திருவெள்ளரை கோபாலகிருஷ்ண பட்டர் தலைமையில் அய்யங்கார்கள் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். நான்கு ரத வீதிகளிலும் சுற்றி வந்த தேரை பக்தர்கள் “நாராயணா… கோவிந்தா…” என பக்தி கோஷங்களுடன் உற்சாகமாக வடம் பிடித்து இழுத்தனர். பக்தி பரவசத்துடன் நடைபெற்ற இந்த தேரோட்டம் நகரம் முழுவதும் திருவிழா சூழலை உருவாக்கியது. பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு பணிகளுக்காக தீயணைப்பு வாகனம், முதலுதவி வாகனம் உள்ளிட்ட அவசர சேவை வாகனங்கள் தேரை தொடர்ந்து சென்றன. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Read Entire Article