வீட்டு வசதி வாரியத்தின் புதிய அப்டேட் !! 14 மாவட்டங்களில் விற்பனைக்கு தயாராக உள்ள வீடுகள்

4 months ago 16
ARTICLE AD

ஆன்லைன் முறையில் முன்பதிவு

தமிழகத்தில் வீட்டு வசதி வாரியம் சார்பில், பல்வேறு மாவட்டங்களில் புதிய குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இவற்றில், விற்பனைக்கு தயாராக உள்ள வீடுகளை விற்க, வாரிய அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால், வாரியத்தின் கள நிலைப் பணியாளர்கள், அலுவலர்கள், உரிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை. இதனால், வீடுகள் விபரங்களை பொது மக்கள் எளிதாக தெரிந்து கொள்ளவும், ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்யவும், இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டது.

இந்த இணையதளத்தில், வாரியத்தின் நிர்வாக ரீதியான கோட்டங்கள் அடிப்படையில், வீடுகள் இருக்கும் இடங்கள் வகைப்படுத்தப்பட்டன. இதனால் எந்த மாவட்டத்தில், எந்த பகுதியில் வீடு வாங்குவது என்பதை, துல்லியமாக அறிய முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண, வாரிய அதிகாரிகள், இணையதளத்தில் சில மாற்றங்களை செய்துள்ளனர். இதனால், மாவட்ட வாரியாக திட்டங்களை அறிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வீட்டு வசதி வாரிய உயரதிகாரி கூறியதாவது ;

வீட்டு வசதி வாரியத்தில், விற்காமல் உள்ள வீடுகள், புதிதாக கட்டப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ள வீடுகள் போன்ற விபரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பொது மக்கள் எந்த மாவட்டத்தில் வீடு வாங்க நினைத்தாலும் அந்த மாவட்டத்தில் உள்ள திட்டங்களை, துல்லியமாக அறிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, சேலம், விருதுநகர், திருநெல்வேலி உட்பட, 14 மாவட்டங்களுக்கு இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாது, பொது மக்கள், தங்கள் பட்ஜெட், பரப்பளவு தேவை போன்ற விபரங்கள் அடிப்படையில், வீடுகளை தேர்வு செய்யவும், 'ஆன்லைன்' முறையில் முன்பதிவு செய்வோருக்கு, முன்னுரிமையில் சலுகை வழங்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article