வீட்டு பூட்டை உடைத்து திருட்டு... ஒரே நாளில் போலீஸ் கையில் சிக்கிய திருடன்

4 months ago 5
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் வீட்டு உரிமையாளர் குடும்பத்தினருடன் மாடியில் அசந்து தூங்கிய போது நள்ளிரவில் முன்பக்க கதவு பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து நான்கு பவுன் நகை மற்றும் பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை தமிழ்நகர் குமரகுரு காலனி 2வது தெருவை சேர்ந்த செங்கமலம் என்பவரின் மகன் வீரமணிகண்டன் (45). விவசாயி. இவர் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் தனது வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டு இருந்தார். பின்னர் மறுநாள் காலை மாடியிலிருந்து இறங்கி வீட்டுக்குள் செல்ல வந்தார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து துணிமணிகள் சிதறி கிடந்துள்ளன. பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 4 பவுன் நகை,  ரூ.5 ஆயிரம் மற்றும் 2 செல்போன்களையும் காணவில்லை. இதுகுறித்து வீரமணிகண்டன் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில் திருட்டு நடந்த வீடு இருந்த பகுதியில் சந்தேகப்படும் படி ஒரு நபர் அடிக்கடி நடந்து சென்று வந்துள்ளார். இதை பார்த்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த நபரை போலீசார் மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்தனர். இதில் அவர் ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு மேலையூர் பகுதியை சேர்ந்த தெற்கு தெருவை சேர்ந்த குருசாமி என்பவரின் மகன் அய்யநாதன் (44) என்பதும் வீரமணிகண்டன் வீட்டு பூட்டை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை திருடியதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அய்யநாதனிடம் இருந்து 4 பவுன் நகை, பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அய்யநாதனை கைது செய்தனர்.

வழிமறித்து ஸ்கூட்டி, மோதிரம் பறித்த மர்மநபர்

தஞ்சாவூர் மேம்பாலத்தில் நேற்று இரவு வாலிபரை வழிமறித்து தாக்கி அவரது ஸ்கூட்டி மோதிரம், செல்போன்  ஆகியவற்றை பறித்துச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டி மேல தெருவை சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ் (32). இவர் செங்கிப்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு இவர் அலுவலக வேலையை முடித்துவிட்டு தஞ்சைக்கு தனது ஸ்கூட்டியில் வந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மர்மநபர் ஒருவர் பிரிட்டோ ஆரோக்கியராஜை வழிமறித்துள்ளார். எதற்காக ஸ்கூட்டியை நிறுத்துகிறீர்கள் என்று பிரிட்டோ ஆரோக்கியராஜ் கேட்ட போது அந்த மர்ம நபர் திடீரென்று உருட்டு கட்டையால் தாக்கி உள்ளார். இதனால் நிலைதடுமாறிய பிரிட்டோஆரோக்கியராடஜை மிரட்டி அவருடைய ஸ்கூட்டர், செல்போன், அரை பவுன் மோதிரம் உள்ளிட்டவற்றை பறித்துக்கு அந்த மர்மநபர் அங்கி தப்பிச் சென்று விட்டார்.

இந்த தாக்குதலில் காயமடைந்த பிரிட்டோ ஆரோக்கியராஜ் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பிரிட்டோ ஆரோக்கியராஜ் அளித்த புகாரின் பேரில் தஞ்சை தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை நகர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடன் பிரச்னையால் தற்கொலை

தஞ்சையில், கடன் பிரச்சினையால் டிரைவர் வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.  தஞ்சாவூர் அருகே மனோஜிப்பட்டி அய்யன் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (40). சரக்கு வேன் டிரைவர். இவரது மனைவி நந்தினி. ஆறுமுகம் குடும்பத் தேவைக்காக கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடன் நெருக்கடியால் ஆறுமுகம் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மனைவி இல்லாத போது வீட்டில்  தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆறுமுகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஆறுமுகத்தின் மனைவி நந்தினி கொடுத்த புகாரின் பேரில் மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Read Entire Article