”வீட்டில் செல்வம் சேர, TNPSC -UPSC தேர்வுகளில் வெற்றிபெற” - ஜாதகம் கூறுவது என்ன?

1 year ago 7
ARTICLE AD

“இதை செய்யுங்கள் வீட்டில் செல்வம் சேரும் “

அன்பார்ந்த ஏபிபி நாடு வாசகர்களே  உங்களுடைய ஜாதகப்படி 11 ஆம் பாவம் மற்றும் இரண்டாம் பாவம்தான் செல்வம் சேர்க்கும் வழி.  ஒருவர் இரண்டாம் பாவத்தை வைத்து தான் அவர் எவ்வளவு சம்பாதிப்பார் என்பதை கணிக்க முடியும்.  அதேபோல ஒருவர் சம்பாதிக்கும் சொத்துக்களை அவர்  எப்படி சேமித்து வைக்கிறார். அவருக்கென்று என்ன சொத்துக்கள் இருக்கிறது? அவருக்கென்று இதுவரை என்ன கிடைத்திருக்கிறது என்பதை பதினோராம் பாவம் தான் முடிவு செய்யும்.  அதிகப்படியான சொத்துக்களையும் 11 ஆம் பாவம் தான் முடிவு செய்யும்.

இப்படி இருக்கும்போது இரண்டு பதினொன்றைத் தவிர மற்ற பாவங்களும் பணம் வரும் வழியை நிச்சயமாக காட்டும்.  ஒருவருக்கு ஏழாம் பாவம் நன்றாக இருந்தால் தொழில் வியாபாரம் மூலமாக பண வரவு உண்டாகும்.  குறிப்பிட்ட ஒரு நபர்  ஆன்மீகவாதியாக இருக்கிறார் என்றால் அவருக்கு இரண்டும் தேவையில்லை 11 தேவையில்லை கேது மட்டுமே போதும் லக்னத்திற்கு கேது எந்த பாவத்தில் இருந்தாலும் அவருக்கு நிச்சயமாக ஆன்மீகம் மூலமாக பணம் வரும்.  ஒருவர் ஜாதகத்தில் நான்காம் பாவம் சிறப்பாக இருந்து விட்டால் அவர் ஒரு மிகப்பெரிய காம்ப்ளக்ஸ் ஐயோ அல்லது கல்யாண மண்டபத்தையோ கட்டி அதன் மூலம் அவருக்கு வருமானத்தை சேர்த்துக் கொள்வார்.  இப்படியாக ஒருவரின் ஜாதகத்தில் இரண்டாம் பாகம் மற்றும் 11ம் பாவத்தை மட்டும் வைத்துவிட்டு அவருக்கு பணம் வரும் வழியை நாம் சேர்க்க முடியாது.

வீட்டில் செல்வம் சேர வேண்டுமென்றால் நிச்சயாமாக  குரு பகவானின் அனுக்கிரகம் இருக்க வேண்டும்.  சுக்கிரன் லட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் பணம் என்றால் குரு பகவான் பல்லாயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர்.  நீங்கள் சுக்கிரன் உங்கள் ஜாதகத்தில் வலிமையாக இருந்தால் நிச்சயமாக எளிதாக பல லட்சங்களை சம்பாதித்து விடலாம் அதை வைத்து நல்ல மாளிகையான வீடுகள் வாகனங்கள் போன்றவை உங்களால் வாங்க முடியும்.  ஆனால் அதுவே குருவின் அருள் உங்களுக்கு இருக்கிறது என்றால் நீங்கள் எவ்வளவு கோடி வேண்டும் என்றாலும் சுலபமாக சம்பாதித்து விடலாம்.  உதாரணத்திற்கு ஏற்கனவே உலகத்தில் ஜெயித்த பணக்காரர்களின் ஜாதகங்களை எடுத்து பார்த்தால் சுக்கிரனை விட குரு மிக பிரம்மாண்ட வளர்ச்சியில் இருப்பார் என்பதை நம்மால் பார்க்க முடியும் .  குரு அமர்ந்திருக்கும் வீடு குரு வாங்கியிருக்கும் நட்சத்திரம் இரண்டு 11 அதிபர்களின் நட்சத்திரமாக இருக்கும்.

உங்கள் ஜாதகத்தில்  லக்கினத்திற்கு குரு எந்த பாவத்தில் இருக்கிறாரோ  அந்த பாவத்தை நீங்கள் இயக்கினாலே போதும் உங்களுக்கு கோடிக்கணக்கான பணம் வந்துவிடும்.  மேலும் முக்கியமான தகவல் என்னவென்றால் குரு எந்த பாவத்தில் இருக்கிறாரோ அந்த பாவத்தின் மீது உங்களுக்கு அதிகப்படியான நாட்டம் இருக்கும்.  உதாரணத்திற்கு குரு உங்களுக்கு  ஆறாம் பாவத்தில் இருக்கிறார் என்று வைத்துக் கொண்டால் நிச்சயமாக நீங்கள் டிஎன்பிஎஸ்சி யூபிஎஸ்சி போன்ற தேர்வுகளை எழுதி அரசு வேலையில் சுலபமாக சேர்ந்து விட முடியும்.  அதேபோல குரு  எட்டாம் பாவத்தில் அமர்ந்திருக்கிறார் என்றால் கேட்கவே தேவையில்லை மற்றவர்களுடைய சொத்துக்கள் உங்கள் கைகளுக்கு தானாகவே வந்து சேர்ந்துவிடும்.

குருவை எப்படி இயக்குவது ?

குரு பகவானுக்கு உகந்த நாள் வியாழக்கிழமை மட்டுமல்ல அனைத்து நாட்களுமே தான் நீங்கள்  உங்கள் வீட்டில் அருகில் இருக்கக்கூடிய சிவன் கோயிலில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கக் கூடிய குரு பகவானை சென்று வழிபட்டு வாருங்கள்.  செல்வம் செல்வாக்கு மட்டுமல்லாமல் புத்திர பாக்கியம் போன்ற மிகச் சிறப்பான பலன்களை அவர் வாரி வழங்குவார்.

ஒருவருக்கு அவர் எதிர்பார்க்காத பணம் மிகப்பெரிய சொத்துக்கள் அல்லது  மற்றவர்கள் உழைத்த  பணம் போன்றவை உங்கள் கைகளுக்கு வர வேண்டும் என்றால் உங்கள் ஜாதகத்தில் இருக்கக்கூடிய குருவை இயக்கினால் மட்டுமே அது சாத்தியமாகும்.  குருவுக்கு உகந்த நிறம் மஞ்சள்.  இப்படியாக குருபகவானின் ஆலயத்திற்கு சென்று வழிபடுவது குருவின்  மந்திரங்களை சொல்வது குருவுக்கு ஏற்ற மஞ்சள் துணி உடுத்துவது போன்றவை செய்வதன் மூலமாக உங்கள் ஜாதகத்தில் இருக்கக்கூடிய குரு பகவானை நீங்கள் இயக்கி அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் வருவாயை ஈட்டலாம்.

குறிப்பு: இந்த தகவலானது, மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஜோதிடரின் தனிப்பட்ட கருத்தாகும், இது ஏபிபி- நாடு-வின் கருத்தல்ல என்பதை தெளிவுபடுத்துகிறோம்.

Read Entire Article