திண்டுக்கல்லில் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ரவுடியை பழிக்கு பழியாக அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். அதே போல் நேற்று முன்தினம் இந்த கொலை நடப்பதற்கு முன்பு சுமார் 48 மணி நேரத்தில் ஏற்கனவே இதே பகுதியில் ஒரு கொலை சம்பவம் அரங்கேறிருந்த நிலையில் நேற்று மாலை நடந்த கொலை சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கொலை தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் இருந்து மொட்டணம்பட்டி செல்லும் சாலையில் உள்ள டிவைன் நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி மஞ்சுளா இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. இவர் சுள்ளான் என்பவரை 2020 ஆம் ஆண்டு வெட்டி படுகொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்பொழுது ஜாமினில் வெளியே வந்துள்ளார். மேலும் திண்டுக்கல்லில் இருந்தால் எதிரிகளால் தனது உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் தற்பொழுது திருப்பூரில் வசித்து வருகிறார்.

வால்பாறை சுற்றுலா செல்ல பாஸ்ட் டேக் வசதி அறிமுகம் ; இனி சோதனை சாவடியில் காத்திருக்க வேண்டியதில்லை

இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை திருப்பூர் அழைத்துச் செல்வதற்காக தனது வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று இரவு தனது வீட்டில் தாய், அக்காவுடன் அமர்ந்து உணவு அருந்தி கொண்டிருந்தார். அப்பொழுது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து தாய் கண்முன்னே வினோத்தை வெட்டி படுகொலை செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீசார் வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!

கொலை நடந்த இடத்தில் காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த சம்பவத்திற்கு முன்பு நேற்றைய முன்தினம் வேடப்பட்டி பகுதியில் கூலித்தொழிலாளி பாண்டி என்பவர் மது போதையில் ஏற்பட்ட தகராறு வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அச்சத்தில் இருந்த பொதுமக்களை தற்போது 48 மணி நேரத்தில் மேட்டுப்பட்டி பகுதியில் வினோத்குமார் என்பவர் வீடு புகுந்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் மேலும் அச்சத்திலும், அதிர்ச்சியிலும் பொதுமக்கள் உறைந்துள்ளனர்.