வீடு வாடகைக்கு எடுத்து , வெளி மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் !! பெண்கள் மீட்பு

2 weeks ago 3
ARTICLE AD

வீடு வாடகைக்கு எடுத்து , வெளி மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் !! 2 பெண்கள் மீட்பு

சென்னை கீழ்பாக்கம் கார்டன் சாலையில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்த போது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவது உறுதி செய்யப்பட்டது. அதன் பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் வீட்டில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய மோஹித் (எ) முகமது ஆசிப் நவாஸ் ( வயது 30) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் மோஹித் பெண் ஒருவருடன் சேர்ந்து வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வந்ததும், இவர் பான் மசாலா கடை வைத்து நடத்தி வருவதும் தெரிய வந்தது.

அவரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு தங்க வைத்திருந்த இரண்டு வெளி மாநில பெண்கள்  மீட்கப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மோஹித் (எ) முகமது ஆசிப் நவாஸ் விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார். மீட்கப்பட்ட 2 பெண்கள் அரசு காப்பகத்தில் சேர்க்கப்படவுள்ளனர்.

சிறையில் ஏற்பட்ட மோதலுக்கு பழிவாங்க சரித்திர பதிவேடு ரவுடியை வெட்ட வந்த இரண்டு பேர் கைது

சென்னை வியாசர்பாடி பி கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பவானி ( வயது 45 ) இவரது மகன் கௌதம் என்கின்ற ஆள்காட்டி கௌதம் ( வயது 22 ) சரித்திர பதிவேடு ரவுடியான இவர் மீது ஒன்பது குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த 12 ஆம் தேதி குற்ற வழக்கு ஒன்றில் சிறைக்கு சென்ற இவர் 19ஆம் தேதி நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் , பவானி வீட்டில் இருந்த போது அவரது வீட்டிற்கு வந்த இரண்டு பேர் பவானியின் மகன் ஆள்காட்டி கௌதம் எங்கே என கேட்டு கத்தியால் பவானியை மிரட்டி விட்டு சென்றனர். இதுகுறித்து பவானி வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வியாசர்பாடி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஆள்காட்டி கௌதம் சிறையில் இருந்த போது அவருடன் சிறையில் இருந்த பாலாஜி என்கின்ற மிட்டாய் பாலாஜி என்ற நபருக்கும் கௌதமுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

தற்போது இருவரும் சிறையில் இருந்து வெளியே வந்த காரணத்தினால் பாலாஜி தனது நண்பருடன் சேர்ந்து ஆள்காட்டி கௌதமை வெட்ட அவரது வீட்டிற்கு வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து வியாசர்பாடி பி கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்கின்ற மிட்டாய் பாலாஜி ( வயது 25 ) மற்றும் அவரது நண்பர் சர்மேஷ் ( வயது 25 ) என இருவரையும் கைது செய்த வியாசர்பாடி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read Entire Article