வீடு புகுந்து தங்கச் செயின் பறிப்பு; தடுக்க முயன்றவருக்கு நேர்ந்த கதி? தஞ்சையில் பரபரப்பு

3 weeks ago 5
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நள்ளிரவில் வீடு புகுந்து மனைவியின் தங்கச்செயினை பறித்த டவுசர் கொள்ளையர்களை தடுக்க முயன்ற கணவர் கம்பியால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே முதல்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி என்பவரின் மகன் மைக்கேல்நவீன் (30). தனியார் கம்பெனி ஊழியர். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டில், மைக்கேல்நவீனின் அம்மா தவசிமேரி, சித்தி லீமாரோஸ், மனைவி இவாஞ்சலின் ஆகியோர் ஹாலில் படுத்து துாங்கிக் கொண்டிருந்தனர். மைக்கேல்நவீன் தனது மூத்த மகளுடன் வீட்டில் இருந்த ரூமுக்குள் துாங்கிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 1:30 மணிக்கு மைக்கேல்நவீன் வீட்டு கதவு தாழ்ப்பாளை சத்தமின்றி உடைத்து கொண்டு டவுசர் மட்டும் அணிந்திருந்த 2 பேர் உள்ளே புகுந்தனர். அசந்து தூங்கிக் கொண்டிருந்த இவாஞ்சலின் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்கச் செயினையும், அருகில் படுத்திருந்த தவசி மேரியின் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்கச் செயினையும் அறுத்துள்ளனர்.

இதனால் திடுக்கிட்டு விழித்த இவாஞ்சலின் திருடன், திருடன் என்று அலறியுள்ளார். இதனால் அந்த டவுசர் கொள்ளையர்கள் இருவரும் தப்பி செல்ல முயன்றுள்ளனர். மனைவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மைக்கேல்நவீன் அந்த டவுசர் கொள்ளையளர்களில், ஒருவனை பிடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த டவுசர் கொள்ளையன் தன்  கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் மைக்கேல்நவீனை சரமாரியாக தாக்கிவிட்டு  வீட்டின் பின்புறம் உள்ள தென்னை தோப்பு வழியாக தப்பி ஓடிவிட்டனர். இதில் தலையில் காயமடைந்த மைக்கேல்நவீனுக்கு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து, பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, டவுசர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article