விவசாயிகளே ஏப்ரல் 15 கடைசி தேதி.. இதை செய்ய மறந்துறாதீங்க ! அப்புறம் வருத்தப்படுவீங்க..!

8 months ago 6
ARTICLE AD

செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை 26,824 விவசாயிகள் தங்களது நில உடைமைகளை பதிவு செய்யாமல் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நில உடமை விவரங்கள்

விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதில் ஏற்படும் காலதாமதத்தினை தவிர்க்கும் வகையிலும் அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன் பெறஏதுவாகவும், அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திட தமிழ்நாட்டில் வேளாண் அடுக்குத் திட்டம் (AgriStack) செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

விவசாயிகள் செய்ய வேண்டியது என்ன ?

தற்போது, விவசாயிகளின் பதிவு விவரங்களுடன், ஆதார் எண், கைபேசி எண், நில உடைமை விவரங்களையும் விடுபாடின்றி இணைக்கும் பணி சம்பந்தப்பட்ட வருவாய் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் விவசாயிகள் பொது சேவை மையம் (CSCs) சென்று அங்கும் நில உடைமை விவரங்கள் இணைக்கப்பட்ட பின்னர் அனைத்து விவரங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதார் எண் போன்ற, தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தப்படும்.

நன்மைகள் என்னென்ன ?

2025-26ஆம் நிதி ஆண்டு முதல், பிரதம மந்திரி கவுரவ நிதித் திட்டம் (PMKISAN), பயிர்க்காப்பீடுத் திட்டம் (PMFBY) போன்ற மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்களி விவசாயிகள் எளிதில் பயன் பெற தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம்.

எப்படி பதிவு செய்வது ?

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்களது கிராமங்களில் வேளாண்மை – உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் அல்லது அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாகச் சென்று தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதார், கைபேசி எண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமுமின்றி 15.01.2025 ஆம் தேதிக்குள் இத்திட்டத்தில் பதிவு செய்து பயன் பெறுமாறு செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மார்ச் 31 வரை மட்டுமே நேரம் கொடுக்கப்பட்ட நிலையில், மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்னும் எவ்வளவு பேர் பதிவு செய்யவில்லை?

செங்கல்பட்டு மாவட்டத்தில் 59,317 விவசாயிகளில், 32,493 விவசாயிகள் தங்கள் நில உடமை விவரங்களை பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 26 ஆயிரத்து 824 விவசாயிகள் உடனடியாக நில உடமை விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

Read Entire Article