விவசாயிகளுக்கான ரூ.2 கோடி வரை குறைந்த வட்டியில் கடன் உதவி - பெறுவது எப்படி..? இதோ விபரம்...!

8 months ago 7
ARTICLE AD

வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 2 கோடி ரூபாய் வரை குறைந்த வட்டியில் வழங்கப்படும் நிதியுதவி உதவியினை பெற்று மயிலாடுதுறை மாவட்டம் விவசாயிகள் பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது.

வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டம்

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு சிறந்த விலை கிடைப்பதற்கும், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளை குறைப்பதற்கும், சந்தை அணுகுதலை எளிதாக்குவதற்கும், திறன்களை மேம்படுத்துவதற்கும் உதவுவதுதான் வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் (Agriculture Infrastructure Fund) முக்கிய நோக்கமாகும்.

ஜீவனாம்சம் கேட்ட மனைவி.. மகனுடன் சேர்ந்து வெட்டிக்கொன்ற கணவன் - நீதிபதி கொடுத்த அதிரடி தீர்ப்பு

ரூ.2 கோடி கடன் உதவி

இந்த திட்டத்தின் கீழ், வங்கிகள் மூலம் நிதி உதவி வழங்கப்படுகிறது. வட்டி சலுகை திட்டத்தின் கீழ் 3 சதவீதம் வட்டி விகிதத்தில், அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை 7 ஆண்டுகள் வரையிலான கடன்கள் வழங்கப்படுகின்றன. மேலும், CGT MSE திட்டத்தின் கீழ் 2 கோடி ரூபாய் வரை கடன் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. இது உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ஊக்குவிப்பு நிதி ஆதரவாகவும் செயல்படுகிறது. இதனுடன் இணைந்து, பிற மாநில மற்றும் ஒன்றிய அரசு திட்டங்களிலும் பயனடையலாம்.

பெட்டிஷனுடன் தயாராக இருங்கள் மக்களே... "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" அடுத்த முகாம் இங்கேதான்...!

தகுதியான பயனாளர்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், சந்தைப்படுத்தல் கூட்டுறவு சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள், வேளாண் தொழில் முனைவோர் மற்றும் ஏற்றுமதியாளர்கள், வர்த்தகர்கள், உணவு பதப்படுத்துவோர் உள்ளிட்ட பலரும் அடங்குகின்றனர்.

கடன்பெற தகுதியான திட்டங்கள்

கிடங்குகள்,

சிப்பம் கட்டும் கூடங்கள்

ரிஃபர் வேன், காப்பிடப்பட்ட வண்டி

சுத்தம் செய்தல், உலர்த்தல், தரம் பிரித்தல் மையங்கள்,

ட்ரோன்கள் வாங்குதல்

இயற்கை வேளாண் இடுப்பொருள் தயாரிப்பு மையங்கள்

வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம்

அரிசி ஆலை, அவல் அரைக்கும் இயந்திரங்கள்

எண்ணெய் பிழிந்தெடுக்கும் இயந்திரங்கள் பொட்டலம் போடும் இயந்திரங்கள்

மற்றும் பல இத்திட்டத்தின் கீழ், ஜூலை 8, 2020 முதல் பெறப்பட்ட கடன்களுக்கு இந்த நிதி உதவிகள் பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு https://agriinfra.dac.gov.in/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம். அதோடு, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 5-வது தளத்தில் உள்ள துணை இயக்குநர் (வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை) நேரில் சந்தித்தும் தெளிவான தகவல்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

Read Entire Article