விவசாய நிலத்தில் ஓஎன்ஜிசியின் இரும்பு குழாய்கள் - அச்சத்தில் விவசாயிகள்

1 year ago 7
ARTICLE AD

குத்தாலம் அடுத்த மாதிரிமங்கலம் கிராமத்தில் விவசாய நிலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் பொக்லைன் மூலம் கொண்டு வந்து இறக்கப்பட்ட இரும்பு குழாய்ளை இணைக்கும் பணி நடைபெறுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

ஓஎன்ஜிசி நிறுவனம்

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகமான ஓஎன்ஜிசி நிறுவனம் இந்தியப் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைத்து பல ஆண்டுகளாக கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. ஓஎன்ஜிசி நிறுவனத்தால் நிலத்தடி நீர், மண்வளம் மற்றும் விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறி இம்மாவட்ட மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் ஓஎன்ஜிசி செல்லும் எண்ணெய் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு வயல்வெளிகளில் எண்ணெய் கசிவு ஏற்படும் சம்பவங்களும் அவ்வப்போது தொடர்ந்து நடந்தேறி வருகிறது.

தொடரும் போராட்டங்கள்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த மாதிரிமங்கலம் கிராமத்தில் 2 ஓஎன்ஜிசி கிணறுகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறையத் தொடங்கிய நிலையில், புதிதாக மற்றொரு கிணறு அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டது. அதற்கு அப்பகுதி கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி தடுத்து அதனை தடுத்து நிறுத்தினர்.

கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்!

மீண்டும் சர்ச்சையில் ஓஎன்ஜிசி

இந்நிலையில் கடந்த 2020 -ம் ஆண்டு அதிமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என கூறி சட்டம் அமல்படுத்தியது. அதன் பிறகு அங்கு புதிதாக எந்த ஒரு  பணிகளும் நடைபெறவில்லை. இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கு விவசாயி மூவேந்தன் என்பவரது வயலில் ஓஎன்ஜிசி நிறுவனத்தினர் பொக்லைன் இயந்திரம் மூலம் இரும்பு குழாய்கள் மற்றும் சில உபகரணங்களை கொண்டு வந்து இறக்கியுள்ளனர்.

அத்வானிக்கு கார் ஓட்டியவர் தான் மோடி! 75 வயாதாகியும் போய் பார்க்கவில்லை - சிவி சண்முகம் தாக்கு

செய்வதறியாது தவிக்கும் விவசாயிகள்

அதனை கண்ட விவசாயி மூவேந்தன் அதிர்ச்சி அடைந்து இங்கு ஏன் பைப்புகளை இறங்குரீகள் என கேட்டுள்ளார். அதற்கு அந்த பைப்களை தற்காலிகமாக அங்கு வைத்து, பின்னர் எடுத்துச் சென்று விடுவோம் என அவர்கள் தெரிவித்ததாக விவசாயி மூவேந்தன் தெரிவித்துள்ளார். ஆனால், அவற்றை அங்கிருந்து கொண்டு செல்லாமல் அந்த இரும்பு குழாய்களை ஒன்றோடு ஒன்று இணைத்து வெல்டிங் வைக்கும் பணியை ஓஎன்ஜிசி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதனால் செய்வதறியாது திகைத்து போன விவசாயி மூவேந்தன், இது குறித்து மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் உதவியை நாடியுள்ளார். மேலும் தங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ள நிலையில், ஓஎன்ஜிசி நிறுவனம் புதிதாக எந்த பணியையும் தொடங்கக் கூடாது என விவசாயி கோரிக்கை வைத்துள்ளார்.

ஓஎன்ஜிசி விளக்கம்

இதுகுறித்து, ஓஎன்ஜிசி தரப்பு கருத்துக்களை கேட்டபோது, அப்பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் எந்த புதிய பணிகளையும் மேற்கொள்ளவில்லை. ஏற்கெனவே உள்ள பைப்லைனில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அவற்றை மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்றிருக்கும். ஆனாலும், விவசாயியின் ஒப்புதல் கடிதம் இல்லாமல் எந்த பணியும் நடத்தப்படுவதில்லை என தெரிவித்தனர்.

Read Entire Article