விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2025-26 சிறப்பு (சம்பா) நெல் II பயிருக்கு காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் அழைப்பு விடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் 2025-26ஆம் ஆண்டிற்கு அறிவிக்கை செய்யப்பட்டுள்ள 2025-26 சிறப்பு (சம்பா) நெல்-1 பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் கேட்டுக்கொண்டார். இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பயிர் இழப்பினை ஈடுசெய்வதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும் விழுப்புரம் மாவட்டத்தில் 2025-26ஆம் ஆண்டு சாகுபடி செய்யும் காரீப், சிறப்பு (சம்பா) மற்றும் ராபி பருவத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மாவட்டத்தில் சிறப்பு (சம்பா) பருவத்திற்கு 13 வட்டாரங்களில் உள்ள 794 வருவாய் கிராமங்களில் நெல்-11 பயிர் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. சிறப்பு (சம்பா) பருவத்தில் நெல்-1 நடவு செய்துள்ள விவசாயிகள் 15.11.2025-க்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.

விழுப்புரம் மாவட்டத்திற்கு பயிர் காப்பீட்டு நிறுவனமாக Universal Sompo General Insurance Co.Ltd. நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்ட பயிர் நெல்-1 விவசாயி செலுத்த வேண்டிய பிரிமியம் (ரூபாய்/ ஏக்கர்) 544.28, காப்பீட்டுத் தொகை (ரூபாய் / ஏக்கர்) 36285.31, பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் 15.11.2025. பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக காப்பீட்டுத்தொகை செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்

1) அடங்கல் 1435 பசலி
2) சிட்டா
3) வங்கி கணக்கு புத்தகம்
4) ஆதார் எண்

நடப்பு பசலி பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்குப் புத்தகம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் பதிவு செய்யும் விவசாயியின் பெயர், நிலப்பரப்பு, சர்வே எண், உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளித்து விவசாயிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களை அறிய அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகவும்.

எனவே, சிறப்பு (சம்பா) பருவத்தில் நெல்-!! பயிரிட்டுள்ள விவசாயிகள் 15.11.2025 க்குள் காப்பீடு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், தெரிவித்துள்ளார்.