விழுப்புரம் பெண்கள் சாதனை: குழித்தட்டு கரும்பு நாற்று உற்பத்தி மூலம் மாதம் ₹75,000 வருமானம்!

4 months ago 4
ARTICLE AD

விழுப்புரம்: முண்டியம்பாக்கம் பகுதியில் மகளிர் சுய உதவி குழு பெண்கள் மூலமாக குழித்தட்டு முறையில் கரும்பு நாற்று உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் பெண்கள்.

கரும்பு நாற்று உற்பத்தி செய்து விற்பனை செய்யும் மகளிர்

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் பகுதியில் மகளிர் சுய உதவி குழு பெண்கள் மூலமாக குழித்தட்டு முறையில் கரும்பு நாற்று உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு விவசாயம் செய்யும் வகையில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முண்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்த 52 பஞ்சாயத்துகளிலும் உள்ள பெண்கள், விவசாயிகளுக்கு பயன் தரும் வகையில் குழித்தட்டு முறையில் கரும்பு நாற்று உற்பத்தி செய்து விநியோகம் செய்து வருகிறார்கள்.

நாற்று உற்பத்தி செய்வது எப்படி?

இந்த குழுவில் மொத்தம் 20 நபர்கள் உள்ளநிலையில், கரும்பு பருவை தேர்ந்தெடுத்து, 200 கிராம் பாவிஸ்டின் பவுடர், 50 கிராம் யூரியா, 100 லிட்டர் தண்ணீரில் கலந்து அதில் சேகரிக்கப்பட்ட கரும்பு பருக்களை 2 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர், ஒரு அடி உயரம், 10 அடி அகலத்துக்கு தென்னை நார்க்கழிவுகளை பரப்பி அதன் மீது பருக்களை மட்டும் இட்டு அதன்மீது ஈரப்பதமான தென்னை நார்க்கழிவுகளை தூவ வேண்டும். மேலும் கரும்பு நாற்று மீது மண்புழு உரத்தை தூவவேண்டும்.

பின்னர், மூன்று நாட்களுக்குப் பிறகு பருக்கள் முளைகட்டிய நிலையில் இருக்கும். ஒவ்வொரு பருக்களையும் எடுத்து 50 குழித்தட்டுகளில் (இதற்காக தனியாக பிளாஸ்டிக் தட்டுகள் கிடைக்கிறது) கால் அளவு கம்போஸ்ட்டாக மாற்றப்பட்ட தென்னை நார்க்கழிவு இட்டு, அதில் முளைக் குருத்து மேல்நோக்கி இருக்குமாறு பருக்களைப் பதிக்க வேண்டும். ஐந்து நாட்கள் கழித்து திறந்து பார்த்து ஒன்பதாவது நாளில் ஒரு மருந்தும், 15வது நாளில் ஒரு உரம், 20 வது ஒரு நாளில் ஒரு உர மருந்து, 25 வது நாளில் ஒரு உர மருந்து, முப்பதாவது நாளில் கரும்பு நாற்று விற்பனைக்கு வந்துவிடும் என சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் தெரிவித்தனர்.

குறைந்த நாட்களிலே லாபம் தரக்கூடிய கரும்பு நாற்று

இப்படி குழித்தட்டு முறையில் கரும்பு நாற்றுகளை உற்பத்தி செய்வது, விவசாயிகளுக்கு நேரம், ஆள் கூலி போன்றவற்றை மிச்சம் செய்யலாம். சாதாரண கரும்பு நாற்று முறை ஆறு மாதங்கள் வரை நேரம் எடுத்துக் கொள்ளும், ஆனால் இது குறைந்த நாட்களிலே லாபம் தரக்கூடியதாக இருக்கும்.

ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 1 லட்சம் கரும்பு நாற்றுகளை உற்பத்தி செய்ய முடியும். இதில் 80% முளைக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.தொடர்ந்து நிழல் வலைப் பகுதியில் 22 நாட்கள் கவனமாகப் பராமரிக்க வேண்டும். இவ்வாறு நாற்று முறை கரும்பு சாகுபடிக்கு சொட்டு நீர்ப்பாசனம் நல்ல முறையில் கைகொடுக்கிறது. இதற்கு அரசு மானியம் வழங்குகிறது. அதிலேயே தேவையான உரங் களையும் இடுவதால் பயிரும் திரட்சியாக வளர்கிறது. களை கட்டுப்படுத்தப்படுகிறது. பராமரிப்பு மிகவும் எளிதாகிறது. மேலும், இயந்திரம் மூலம் அறுவடை செய்ய வசதியாக உள்ளது. இத்தகைய நாற்று முறை சாகுபடியின் மூலம் நடவு செலவில் 50 சதவீதத்தைக் குறைக்கலாம்.

ஒரு மாதத்திற்கு 75,000 ரூபாய் வரை வருமானம்

ஒரு மாதத்திற்கு 75,000 ரூபாய் வரை வருமானம் பார்க்க முடியும் இதில் உரங்கள், இதர செலவினங்கள் போக 30,000 ரூபாய் வரை லாபம் பார்க்க முடியும். அரசாங்கமே மானியம் கொடுத்து அனைத்து வசதிகளும் செய்து தருவதால், நமக்கு வேற எந்த செலவீனமும் இல்லை என பெண்மணிகள் தெரிவித்தனர். மேலும் இந்த விவசாய முறையை ஆரம்பித்து ஆறு மாதங்கள் ஆன நிலையில் இன்னும் வெற்றிகரமாக செயல்பட தொடர்ந்து போராடுவோம் என பெண்மணிகள் தெரிவித்தனர்.

Read Entire Article