விழுப்புரம் டூ திருவண்ணாமலை இனி ஈஸி! - தண்டரை - அடுக்கம் புதிய தார் சாலை பணிகளின் 'மாஸ்' அப்டேட்!

1 month ago 5
ARTICLE AD

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஒன்றியம், தண்டரை ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் புதிய தார் சாலை அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க. பொன்முடி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து துறைகளிலும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக ஊரக பகுதிகளில் சாலை வசதி, குடிநீர், சுகாதாரம் போன்ற அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் 1.818 கி.மீ. நீளத்திற்கு தார் சாலை அமைக்கும் பணியினை இன்றையதினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தண்டரை ஊராட்சியை பொருத்தவரையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பொது நிதி திட்டத்தின் கீழ் வடிகால் வாய்க்கால் பணிகள், புதிய போர்வெல், பைப்லைன் அகலப்படுத்துதல், சிறு மின்விசை அமைத்தல் போன்ற பணிகளும், 15வது மத்திய நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் குடிநீர் பணி, குடிநீர் குழாய் அமைத்தல், விளையாட்டு மைதானம், தனிநபர் உறிஞ்சி குழாய் அமைத்தல் போன்ற பணிகளும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வடிகால் வாய்க்கால், சிமெண்ட் சாலை, குளம் மற்றும் ஏரி வேலைகள், நூலக கட்டடம் பராமரிப்பு போன்ற பணிகளும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடுதல், செக் டேம் அமைத்தல் போன்ற பணிகளும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சிமெண்ட் சாலை, வடிகால் வாய்க்கால் போன்ற பணிகள், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் மற்றும் நபார்டு திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் சாலை பணிகளும் தண்டரை ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கலைஞர் கனவு இல்லம் திட்டம் மற்றும் (PMAY) வீடுகட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டித்தரப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க.பொன்முடி தெரிவிக்கையில்,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராமங்கள் தோறும் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில், ஊரக பகுதிகளில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட வேண்டுமென திட்டங்களை கொண்டு வந்தார். அதனடிப்படையில் கிராமங்கள் தோறும் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக

இன்றையதினம் விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஒன்றியம் தண்டரை ஊராட்சியின் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த தண்டரை - அடுக்கம் சாலையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் 1.818 கி.மீ. நீளத்திற்கு தார் சாலை அமைக்கும் பணியினை இன்றையதினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தண்டரை அடுக்கம் சாலையானது வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், வனத்துறையின் அனுமதிப்பெற்று புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அமைக்கப்படுவதால் தண்டரை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் விழுப்புரம், திருவண்ணாமலை, கண்டாச்சிபுரம் மற்றும் வேட்டவலம் ஆகிய ஊர்களுக்கு எளிதில் செல்ல முடியும். கிராமங்கள் தோறும் இதுபோன்ற சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண், தமிழ் புதல்வன் போன்ற திட்டங்களை செயல்படுத்தி மாதம் 1000 பெண்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், விடியல் பயணம் மூலம் கட்டணமில்லா பேருந்து சேவையில் மகளிர்கள் பயனடைந்து வருகிறார்கள். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று சாதனை படைத்து வருகிறார்கள்.

கிராமங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற அடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராமங்கள் தோறும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற உன்னதநோக்கத்தில் பல்வேறு அரசு நலத்திட்டங்கள் செல்படுத்தி வருவதோடு, கிராமகளில் குடிநீர் வசதி, சுகாதாரம், சாலைகள் போன்ற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறார் என திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

Read Entire Article