விழுப்புரம் சிறுமிக்கு வீடு கட்டி உதவிய KPY பாலா: நெகிழ்ச்சியான பிறந்தநாள் பரிசு!

5 months ago 4
ARTICLE AD

விழுப்புரம்: கண்டாச்சிபுரம் அருகே தண்டுவடம் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆபரேஷனுக்கு உதவியதோடு வீடு கட்டி கொடுத்த நிகழ்ச்சி தொகுப்பாளர் பாலாவின் செயல் நெகிழ்ச்சி அடையசெய்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ஆயந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அந்தோணி பிரியா ஆரோக்கியநாதன் தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களது பெண் குழந்தையான சிறுமி ஆரோக்கிய அனூஷியா விளையாடிக் கொண்டிருந்த போது தவறி விழுந்து முதுகில் தண்டுவட எலும்பு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. பாதிப்பு ஏற்பட்ட சிறுமிக்கு அப்போதே சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் சிகிச்சையின் போது வைக்கப்பட்ட இரும்பு கம்பியை அப்புறப்படுத்தாமல் விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் சிறுமியின் மூளை, கை, கால் பகுதிக்கு செல்லக்கூடிய நரம்புகள் பாதிக்கப்பட்டு வந்துள்ளது. சிறுமியின் சிகிச்சைக்கு பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சிறுமியின் தந்தை ஆரோக்கியநாதன் கடந்த ஓராண்டுக்கு முன்னர் விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார்.

இதனால் செய்வதறியாது திகைத்த குடும்பத்தினரை அதே கிராமத்தில் உள்ள சர்ச் ஒன்றின் ஃபாதர் சகாய செலஸ்டின் சிகிச்சைக்காக பணம் திரட்ட முன்வந்துள்ளார். அப்போது விழுப்புரம் மாவட்ட KPY பாலா நற்பணி இயக்கத்திடம் இது குறித்து தகவலை தெரிவித்துள்ளார். அவர்கள் மூலமாக ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து சிறுமி ஆரோக்கிய அனுஷியாவை சிகிச்சையில் சேர்த்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து KPY பாலாவிற்கு இயக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த சிறுமியை விரைவில் பார்ப்பதாக உறுதி அளித்து இருந்தார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றிற்காக விழுப்புரம் வந்த KPY பாலா சிறுமியின் வீட்டிற்கு வந்து அவரை பார்த்து அந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவர்களது வீட்டின் சுவர் முழுவதும் உடைந்து காரைகள் பெயர்ந்து மண் பூச்சுகள் வெளியே தெரிந்து காணப்பட்டது. இதனைக் கண்ட அவர் உடனடியாக ஃபாதர் சகாய செலஸ்டியனிடம் சிறுமிக்கு புதியதாக வீடு கட்டித் தருவதாக உறுதி அளித்தார். மேலும் வீடு கட்டுவதற்கான முழு தொகையையும் தானே வழங்குவதாகவும் தெரிவித்தார்.

அதன் பின்னர் முதற்கட்டமாக சிறுமியின் வீடு கட்டுவதற்காக பத்தாயிரம் ரூபாயை பங்குத் தந்தை சகாய செலஸ்டின் இடம் ஒப்படைத்தார். மேலும் ஃபாதரையே முன் நின்று இந்த வீடு கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் மூன்று மாதத்திற்குள் வீடு கட்டி முடித்து அதனை திறந்து வைப்பதற்காக தானே வருவதாகவும் அதற்கான முழு செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த இரண்டரை மாதங்களில் 3 லட்சம் ரூபாய் செலவில் சிறிய அளவிலான புதிய வீடு ஒன்று கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா பாலாவின் பிறந்த நாளான நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட KPY பாலா புதிய வீட்டினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறுமியின் தாயாரிடம் ஒப்படைத்தார். மேலும், பாலாவின் பிறந்தநாளை ஒட்டி தண்டுவட பாதிப்புக்குள்ளான சிறுமி ஆரோக்கிய அனுஷியா பாலாவிற்கு தனது பிறந்தநாள் பரிசாக கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கினார். சொன்னதைப் போன்று விரைந்து புதிய வீடு கட்டி கொடுத்த பாலாவிற்கு சிறுமி ஆரோக்கிய அனுஷியாவின் குடும்பத்தாரும், ஊர் பொதுமக்களும் தங்களது நன்றியை தெரிவித்தனர்.

Read Entire Article