விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள அய்யன்கோவில்பட்டு தென்றல் நகரிலுள்ள உர கம்பெணியின் உரிமையாளர் கம்பெனியில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் உறவினர்கள் கம்பெனியை முற்றுகையிட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். பாலியல் சீண்டலில் ஈடுபட்ட உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அருகேயுள்ள அய்யன்கோவில் பட்டு தென்றல் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் உர கம்பெணியில் அய்யன் கோவில் பட்டுவை சார்ந்த 22 வயது பெண் டெலி காலராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் பணிக்கு சென்ற பெண்ணிடம் மாலை நேரத்தில், உர கம்பெணி உரிமையாளர் அப்துல்அகிம் என்பவர் கட்டி பிடித்து தகாத முறையில் நடந்து கொண்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் தனது உறவினர்களிடத்தில் தெரிவிக்கவே உர கம்பெனிக்கு வந்து முற்றுகையிட்டு சண்டையிட்டுள்ளனர்.

அப்போது உர கம்பெணி உரிமையாளர் கம்பெனியை மூடியதால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் கம்பெனியின் ஜன்னல் கண்ணாடிகளை கல் எடுத்து அடித்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தாலுக்கா போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்து உரிமையாளர் அப்துல் அகிம்மை கைது செய்தனர். அகிம்மை போலீசார் கைது செய்த போது குற்றவாளியை காரில் அழைத்து செல்வதா என கூறி உறவினர்கள் போலீசாரின் காரினை மறித்து வாக்குவாதம் செய்தனர். இச்சம்பவத்தால் தென்றல் நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்.,

விழுப்புரம் அண்ணாமலை ஓட்டல் பின்புறம் உள்ள தென்றல் நகரில் இயங்கி வரும் தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் பணி புரியும் இளம் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் ஆஜராகி தான் விழுப்புரம் தென்றல் நகர் பின்புறத்தில் இயங்கி வரும் தனியார் கம்பெனியில் டெலி காலிங் பிரிவில் பணிபுரிவதாகவும் இதன் உரிமையாளர் அப்துல் ஹக்கிம் வயது 51, தந்தை பெயர் முகமது ஹனிபா, மாதா கோவில் தெரு, காணை, விழுப்புரம் என்பவர் நேற்று முதல் தளத்தில் உள்ள தனது அறைக்கு வரும்படியும், ஹிந்தி மொழியில் கம்பெனிக்கு ஆர்டர் எடுக்கும் படி அழைத்ததின் பேரில், அங்கு சென்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட அப்துல் ஹக்கிம் என்பவரை தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் செல்வநாயகம் தலைமையிலான காவலர்கள் இன்று காலை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

விழுப்புரம் மாவட்ட காவல் துறையின் வேண்டுகோள் பதிவு :

பணிபுரியும் இடங்களில் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள் மற்றும் பிரச்சனைகளுக்கு பெண்களுக்கான உதவி எண் 181 மற்றும் காவல் உதவி செயலியில் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.