விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் ஒன்றிய அரசின் மிஷன் சக்தி திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு திட்டங்கள் செயல்படுத்திட மாவட்ட மகளிர் அதிகார மையம் (District Hub for Empowerment of Women DHEW) செயல்பட்டு வருகிறது. மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள ஒரு பாலின நிபுணர் (GENDER SPECIALIST) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மகளிர் அதிகார மையத்தில் வேலை

விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் ஒன்றிய அரசின் மிஷன் சக்தி திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு திட்டங்கள் செயல்படுத்திட மாவட்ட மகளிர் அதிகார மையம் (District Hub for Empowerment of Women DHEW) செயல்பட்டு வருகிறது.

மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள ஒரு பாலின நிபுணர் (GENDER SPECIALIST) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் ஒரு பாலின நிபுணர் (GENDER SPECIALIST) பணியிடத்திற்கு கீழ் காணும் தகுதி மற்றும் முன் அனுபவம் தேவைப்படுகிறது.

தகுதிகள்:

சமூக பணி அல்லது சமூகவியல் சார்ந்த பிரிவுகளில் (Master of Social Work/ Socialogy) முதுகலைப் பட்டம் பெற்று குறைந்த பட்சம் சமூகப் பணியில் 3-வருடம் அரசு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் பணிபுரிந்த முன் அனுபவம் இருத்தல் வேண்டும். 35 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும் (Below 35 years) தொகுப்பூதியம் மாதம் ரூ. 21,000/- (ரூபாய் இருபத்தோராயிரம் மட்டும்).

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது விழுப்புரம் மாவட்ட இணையதளத்தில் (https://viluppuram.nic.in) பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூகநல அலுவலகத்திற்கு 27.10.2025 மாலை 5.45 மணிகுள் நேரில் சமர்ப்பிக்க தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி 27.10.2025 ஆகும். கடைசி தேதிக்குபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்படாது என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.