விளையாட்டு வினையானது... சுவர் இடிந்து சிறுமி பலி: கும்பகோணம் அருகே அதிர்ச்சி

3 months ago 7
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே விளையாட்டு விபரீதம் ஆனதில் சிறுமி பலியானார். சிறுவன் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவடடம் கும்பகோணம் வட்டம், சேங்கனூரைச் சேர்ந்தவர் குமார். விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கு வசிகா(13), கவின்(10) என இரு குழந்தைகள். இவர்கள் இருவரும் முறையே திருவாய்ப்பாடியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு படித்து வந்தனர். குமார் தான் வசிக்கும் தொகுப்பு வீட்டின் நான்கு புறங்களிலும் விரிவுப்படுத்தி ஷெட் அமைப்பதற்காக இரும்பு ராடுகளை மேலே பொருத்தி வைத்துள்ளார்.

ஊஞ்சல் கட்டி விளையாட்டு

இந்தநிலையில் கடந்த டிச30-ம் தேதி, வசிகா, இவரது தம்பி கவின் ஆகியோர், இரும்பு ராடில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது, பாரம் தாங்காமல் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் வசிகா, கவின் பேரும் படுகாயம் அடைந்தனர். சுவர் இடிந்து விழுந்து குழந்தைகள் அலறுவதை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்,காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வசிகா உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த கவினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சோழபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலையை கடக்க முயன்றவர் கார் மோதி பலி

தஞ்சாவூர் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் கார் மோதி பலியானார். தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் காளிமுத்து (65).  கூலித் தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இந்நிலையில் காளிமுத்து நேற்று மாலை தனது மனைவி லட்சுமியுடன் தஞ்சை மாதாக்கோட்டையில் உள்ள உறவினர் ஒருவரை அழைத்து வருவதற்காக புறப்பட்டார்.

தஞ்சை - நாகை சாலையில் இருவரும் நடந்து சென்றபோது  காளிமுத்து சாலையை கடந்து செல்ல முற்பட்டார். அப்போது சீர்காழியிலிருந்து திருச்சி நோக்கி சென்ற கார் காளிமுத்து மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட காளிமுத்து படுகாயமடைந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி லட்சுமி அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் காளிமுத்துவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு காளிமுத்துவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த நாகை தென்பாதி பகுதியை சேர்ந்த டிரைவர் பாலசுப்பிரமணியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Read Entire Article