விளையாட்டு விடுதியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - கடைசி தேதி எப்போது?

8 months ago 6
ARTICLE AD

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செயல்பட்டு வரும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான வாய்ப்பினை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது;

2025-2026 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் 2025-2026 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் தொடங்கிய நிலையில், விண்ணப்பிக்க கடைசி நாள் 06.04.2025 மாலை 5.00 மணி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்கள் www.sdat.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 1, 1A: தேர்வர்களே.. எல்லோரும் எதிர்பார்த்த அறிவிப்பு; டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1ஏ தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- தேர்வு எப்போது?

மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள்

சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் எதிர்வரும் 08.04.2025 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. தேர்வு நடத்தப்படும் விளையாட்டுகள் மற்றும் போட்டிகள் நடைபெறும் இடங்கள் பின் வருமாறு;

ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம்:

தடகளம் (ஆண்கள், பெண்கள்)

பளுதூக்குதல் (ஆண்கள், பெண்கள்)

ஜுடோ (ஆண்கள், பெண்கள்)

வாள்விளையாட்டு (ஆண்கள், பெண்கள்)

கால்பந்து (ஆண்கள்)

கையுந்துப்பந்து (ஆண்கள், பெண்கள்)

Yogi Adityanath: ”ஒழுக்கம்னா என்ன?.. இந்துக்கள்ட்ட இருந்து கத்துக்கங்க” - உ.பி., CM யோகி அட்வைஸ்

நேரு உள்விளையாட்டரங்கம்:

கூடைப்பந்து (ஆண்கள், பெண்கள்)

குத்துச்சண்டை (ஆண்கள், பெண்கள்)

கால்பந்து (பெண்கள்)

கைப்பந்து (ஆண்கள், பெண்கள்)

ரக்பி (பெண்கள்)

MRK ஹாக்கி விளையாட்டரங்கம்:

ஹாக்கி (ஆண்கள், பெண்கள்)

நேரு பார்க் விளையாட்டரங்கம்:

கபடி (ஆண்கள், பெண்கள்)

இந்த அனைத்து போட்டிகளும் 08.04.2025 அன்று காலை 7.00 மணிக்கு தொடங்கும். தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேருவதற்கான வாய்ப்பைப் பெறுவர்.

Donald Trump: பரஸ்பர வரி.. நாளை பெரிய அறிவிப்பு.. ட்ரம்ப்பால் கதிகலங்கி நிற்கும் வர்த்தக உலகம்...

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மேற்படி விடுதியில் சேர மாணவ, மாணவிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான www.sdat.tn.gov.in -ல் விண்ணப்பித்து இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் விளையாட்டு திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என  அறிவுறுத்தியுள்ளார்.

விளையாட்டில் சிறந்து விளங்க விரும்பும் மாணவ, மாணவியர்கள், தங்களது விண்ணப்பங்களை குறித்த நேரத்திற்குள் சமர்ப்பித்து, மாநில அளவிலான தேர்வுப் போட்டிகளில் பங்கேற்று, சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேரும் வாய்ப்பைப் பெறலாம். விளையாட்டு ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, மாநில அளவிலான தேர்வுப் போட்டிகளில் பங்கேற்க தயாராகலாம். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான www.sdat.tn.gov.in-ஐ பார்வையிடலாம்.

Read Entire Article