விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு.. தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு!

1 week ago 4
ARTICLE AD

விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு

கடந்த மார்ச்  மாதம் 10ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் கிராமத்தில் 12ம் வகுப்பு மாணவி காணாமல் போனார். இயற்கை உபாதை கழிக்க சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் பல இடங்களிலும் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அன்றிரவு பெற்றோர் குளத்தூர் போலீசில் புகாரளிக்க சென்றனர்.

ஆனால் மாணவி சிறுமி என்பதால் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு குளத்தூர் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து மகளிர் காவல் நிலையம் சென்ற நிலையில் அங்கு பணியில் இருந்த காவல் நிலைய ஆய்வாளர் பிரவீணா சிறுமியைப் பற்றி தரக்குறைவாக பேசியிருந்தார். மேலும் மாணவியின் பெற்றோர் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.

இந்த சூழலில் மார்ச் 11ம் தேதி அந்த கிராமத்தில் உள்ள முட்புதருக்குள் படுகாயங்களுடன் மாணவி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் போலீசார் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவியை தேடாமல் விட்டது தான் அவரின் உயிரிழப்புக்கு காரணம் என குடும்பத்தினரும், குளத்தூர் கிராம மக்களும் குற்றம்சாட்டினர்.

சிசிடிவி மூலம் சிக்கிய குற்றவாளி

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை கண்டறியும் பணி நடைபெற்றது. கிட்டதட்ட ஒரு வார காலமாக குற்றவாளி சிக்காத நிலையில் போலீசாருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

இப்படியான நிலையில் உள்ளூர் நபர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் செயல்படும் காற்றாலை ஒன்றின் சிசிடிவி காட்சி மூலம்சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டார். மாணவியின் நகத்தில் இருந்த சதைத்துணுக்கு மூலம் குற்றவாளி கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. இதுதொடர்பான வழக்கு தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article