விளாத்திகுளம் சம்பவத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் எதுவும் சொல்ல முடியும் என்று திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளது மனிதத் தன்மை அற்றது என்றும் வாய்ப்பேச்சுக்காக கூட அங்கு சென்று ஒரு ஆறுதல் கூறி பொறுப்பேற்கவில்லை என்றால் எப்படி ஒரு தலைவராக சொல்லிக் கொள்ள முடியும் என அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளரும் நடிகையுமான கௌதமி சாடியுள்ளார்.

கோவை பேரூர் அடுத்த பச்சாபாளையம் பகுதியில் நடைபெற்ற அதிமுக மகளிர் தின விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய கௌதமி, ,வருகிற சட்டமன்ற தேர்தலில் மூன்று முனை நான்கு முனை போட்டி என இருந்தாலும் எப்போதுமே போட்டி என்பது திமுக ,அதிமுகவுக்கு இடையில் மட்டுமே என்றும் மீதம் உள்ளவர்கள் இடையில் வந்தவர்கள் எனவும், ஒரு தேர்தலை சந்தித்த பிறகு காணாமல் போய்விடுவார்கள் என தெரிவித்தார்.

திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்

திமுக வின் ஐந்து ஆண்டு கால ஆட்சியின் கடைசியில் தான் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்ததாகவும் மீதமுள்ள நான்காண்டுகள் பத்து மாதம் மக்கள் மக்களாக தெரியவில்லையா என்றும் கௌதமி கேள்வி எழுப்பினார். தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை வாக்கு வங்கியாக பார்ப்பதாகவும், அதனால் சரியான நேரம் பார்த்து 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தள்ளதாக குற்றம் சாட்டினார்.
மறைந்த முதலமைச்சர் அம்மா இருக்கும்பொழுது பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்தார்கள், ஆனால் தற்பொழுது கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் கொடுப்பதற்கான காரணம் அவர்களுக்கு வாக்குரிமை வந்ததன் அடிப்படையில் தான் என்றும் இப்படிப்பட்ட ஒரு மோசமான மனிதத்துக்கே எதிரான கட்சியையும் ஆட்சியையும் ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் மக்கள் அந்த முடிவை எடுப்பார்கள் என்று முழு மனதோடு நம்புவதாகவும் குறிப்பிட்டார்

கரூர் சம்பவத்தில் இரவோடு இரவாக பிரேத பரிசோதனை அறிக்கை தந்த திமுக அரசு, விளாத்திகுளம் சம்பவத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் சொல்ல முடியும் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளது மனிதத் தன்மை அற்றது என்றும் வாய்ப்பேச்சுக்காக கூட அங்கு ஒரு ஆறுதல் கூறி பொறுப்பேற்கவில்லை என்றால் நீங்கள் எல்லாம் எப்படி ஒரு தலைவராக சொல்லிக் கொள்ள முடியும் என்றும் கேள்வி எழுப்பினர். விளாத்திகுளம் சம்பவம். போதையால் இளைஞர்கள் சீரிழிவது, கொலை, பாலியல் வன்கொடுமை இவை அனைத்தையும் மக்கள் மனதில் வைத்து நிச்சயம் திமுகவை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டதாக அதிமுக கொள்கை பரப்பு இணைச்செயலாளர் கௌதமி தெரிவித்துள்ளார்.