விருதுநகர் மாவட்டம் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது-2026 க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன- மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, தகவல்!

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது

சமுதாய வளர்ச்சிக்குத் தன்னலமின்றிப் பங்காற்றும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு "முதலமைச்சர் மாநில இளைஞர் விருது" வழங்கப்படுகிறது.

விருதின் மதிப்பு: ரூ.1,00,000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம். விருது வழங்கப்படும் நாள்: 15.08.2026 (சுதந்திர தின விழா) விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் & நிபந்தனைகள்: வயது வரம்பு: 15 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். (01.04.2025 அன்று 15 வயது நிரம்பியிருக்க வேண்டும். 31.03.2026 அன்று 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.)

சேவைக் காலம்: கடந்த நிதியாண்டில் (*01.04.2025 முதல் 31.03.2026 வரை*) செய்யப்பட்ட சமூகச் சேவைகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். இருப்பிடம்: விண்ணப்பிக்கும் முன்பாக, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும் (இதற்கான சான்று அவசியம்).

சேவையின் தன்மை: செய்த தொண்டு சமுதாய நலனுக்கானதாகவும், வெளிப்படையாகக் கண்டறிந்து மதிப்பிடக்கூடிய அளவிலும் இருக்க வேண்டும்.

பணி நிபந்தனை: மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகப் பணியாளர்கள்

விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள். கூடுதல் தேவைகள்: விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு பரிசீலிக்கப்படும்.

மாவட்ட காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட நன்னடத்தை சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பிக்கும் முறை & கடைசி நாள்: விண்ணப்பிக்கும் தளம்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.sdat.tn.gov.in ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாள் மற்றும் நேரம்: 06.07.2026 அன்று மாலை 5.45 மணி வரை என மாவட்ட ஆட்சியர் என்.ஓ. சுகபுத்ரா, தெரிவித்துள்ளார்.