விருச்சிக ராசி அன்பர்களே குரு பெயர்ச்சியானதிலிருந்து சற்று கஷ்டமான காலகட்டம் தான்.. எட்டில் மறைவது சக்தி இழக்க செய்யும்..இதுவே நீங்கள் உங்களுடைய இருப்பிடத்தை விட்டு வெளியூருக்கோ, வெளிநாடுகோ சென்றீர்கள் என்றால் அப்படி உங்களை பெரிதாக பாதிப்புக்கு உள்ளாக்காது... இருப்பினும் உள்ளூரில் இருப்பவர்கள் தெரிந்த மக்களிடமே பழகிக் கொண்டிருப்பவர்களுக்கு, சற்று கடினமான காலகட்டம்... எப்படி என்றால் நண்பர்கள் திடீரென்று பகைவர்களாக கூடும்... பிடித்தவர்கள் விலகிப் போகக்கூடும்... சில நேரங்களில் வாயால் வம்பு வழக்குகள் வரலாம்....

நமக்கு துளியும் சம்பந்தம் இல்லை என்றால் கூட வேறு ஒரு பிரச்சனையில் நாம் சிக்கி தவிக்கலாம். பலம் வாய்ந்த உங்களுக்கு பலவீனமான எதிரி தான் இருப்பார் அவர்களுக்கு என்றுமே நீங்கள் சிம்ம சொப்பனம் தான்... உறவினர் நன்கு தெரிந்தவர்கள் எல்லாம் கூட சில நேரங்களில் நமக்கு எரிச்சல் விட்ட கூடும் கவலை வேண்டாம் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சனைகளை நீங்கள் சமாளித்தீர்கள் என்று உங்களுக்கே தெரியும் அல்லவா...

பணம் வரும் வழியும் அப்படித்தான் நன்றாக சம்பாதித்து இருந்தீர்கள் ஒரு காலகட்டத்தில் 10 பேருக்கு நீங்கள் கொடுக்கும் வண்ணம் உங்களுடைய வாழ்க்கை முறை இருந்தது தற்பொழுது குரு மறைந்ததற்கு பின்பாக சற்று வருமானம் குறைவு வரும் பணம் வேறு வழியில் செலவாகிறது என்பது போன்ற சிக்கல்களை சந்தித்து இருப்பீர்கள்... கவலை வேண்டாம் விரைவில் குரு வக்கிரம் பெறுவார் நல்ல காலகட்டமாக உங்களுக்கு அமையும் அப்பொழுது இழந்த சக்தியை மீண்டும் பெறுவீர்கள்... உங்களை விட்டு சென்றவர்கள் தேடி வருவார்கள்... வேலையில் நல்ல பலம் கிடைக்கும் உயரதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள் உங்களுக்கான டிமாண்ட் பெருகும்...

உங்களை விட்டால் இந்த வேலை யாரும் செய்ய முடியாது என்ற அளவுக்கு அமைப்பாக உங்களுக்கு சக்தி கூடும்... உள்ளூரிலிருந்து விட்டு வெளியிடங்களுக்கு வேலை செய்ய வேண்டும் என்று விருப்ப பட்டீர்கள் என்றால் அது நிச்சயமாக நடக்கும்.. இடம் கடந்து நாடு கடந்து போக வாய்ப்பு அதிகரிக்கும்...

விரும்பியவரை விட்டு சற்று விலகி இருக்க நேரிடலாம்.. ஏன் விரும்பியவர் கூட உங்களை விட்டு விலகலாம்...ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது நான் அதிகப்படியான அன்பு தானே செலுத்தினேன் என்று சிந்திக்கக்கூடும் பரிகாரம் இருக்கிறதா என்று கூட நீங்கள் கேட்கலாம் உண்டு.... பெருமாளின் வழிபாடு உங்களின் சங்கடங்களை வெகுவாக தீர்க்கும் அதிகப்படியான அன்பு பொழிந்தவர்கள் தற்பொழுது இன்னும் அதிகமாக பொழிவார்கள்... புதன் வீட்டில் குரு இருப்பது மாணவன் வீட்டில் ஆசிரியர் இருப்பது போன்று சற்று அசௌகரியமாக தான் இருப்பார் ஆசிரியர் வீட்டில் ஆசிரியர் இருந்தால் கம்பீரமாக இருப்பார் ஆட்சி பீடத்தில் இருப்பார் ஆனால் மாணவர் வீட்டில் ஆசிரியர் இருந்தால் அதுபோலத்தான் மாணவர் மனநிலையில் உங்கள் வாழ்க்கையில் செல்லும் பாடங்கள் கற்றுக்கொள்ள ஏதுவான காலகட்டம் சாதாரண பாடம் உள்ள வாழ்க்கை பாடம்..

அருகில் இருக்கக்கூடிய பெருமாள் கோவிலுக்கு சென்று சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றுங்கள் மகாலட்சுமி தாயாரின் பார்வை பட அவருக்கு பூ மாலை வாங்கி சாத்துங்கள் கஷ்டமெல்லாம் பறந்து சந்தோஷம் அடைவீர்கள்... வருமானம் உயர குருவின் பெயர்ச்சி மிக முக்கியம்... ஒன்பதாம் பாவத்தில் எப்பொழுது குழு உச்சம் அடைகிறாரோ அப்பொழுது உங்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது என்று அர்த்தம் ஆகையால் பொறுத்து பொய் ஆகிவிட்டது இன்னும் கொஞ்சம் காலம்தான் சில மாதங்களில் உங்களுக்கு விடிவு காலம் ஆரம்பித்து விடும்... நன்றி வணக்கம்....