தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை விமர்சித்து பிக்பாஸ் ஜூலி தொடர்ச்சியாக இரண்டு வீடியோக்கள் வெளியிட்ட நிலையில், அவருக்கு நடிகை சனம் ஷெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் கடந்த பிப்ரவரி 23ம் தேதி வேலூர் மாவட்டத்தில் பேசினார். அப்போது ஜல்லிக்கட்டு மாடு தொடர்புடைய குட்டிக்கதை ஒன்றை சொன்னார். இதற்கு பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற ஜூலி கடுமையான ஆட்சேபம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார். அவருக்கு தவெக தரப்பினர், விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து மற்றொரு வீடியோ வெளியிட்ட ஜூலி, விஜயை நேரடியாக வம்பிழுத்தார். என்னை பழிவாங்க வேண்டுமானால் நேரடியாக வாங்க என சவால் விடுத்தார். இதற்கு நடிகையும், தவெக ஆதரவாளருமான சனம் ஷெட்டி கொந்தளித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், “ஏப்பா..டேய்.. எங்களைப் பார்த்தா அவ்வளவு முட்டாளுங்களா தெரியுறோமா?. இதை புரியாமல் தான் கேட்கிறேன். ஒவ்வொரு முறையும் விஜய் பேசினால் என்ன ஒரு பயம் ஏற்படுகிறது. அய்யய்யோ.. விஜய் இப்படி பேசுறாரு.. அவரோட ரசிகர்கள் இப்படி பண்ணிருவாங்க.. இதனால உயிர்கள் போயிரும்ன்னு நடக்காத ஒன்றை இவர்களே சீன்களை உருவாக்கி மக்களை தூண்டி விட்டு ஒரு அஜென்டா செட் செய்து இப்படி பண்ணுவது நியாயமா?.. இது தேவையா? .. ரிலாக்ஸா இருங்க..

ஜூலி உங்க மேல இருக்கும் அக்கறையில் தான் ஒரு விஷயம் சொல்கிறேன். இதை நான் வார்த்தையாக சொல்ல மாட்டேன். நீங்களே படிங்க என கூறி தன்னுடைய டி-ஷர்ட்டில் இடம் பெற்றிருந்த “Be Yourself" என்ற வார்த்தையை மேற்கோட்டிட்டு காட்டினார். நீங்கள் நீங்களாக இருங்கள். அவ்வளவு தான் விஷயமே. யாரோ எப்பவோ பிக்பாஸில் போய் ட்ரெண்ட் செட் செய்தார்கள். நாமும் அப்படியே செய்யலாம் என அவர்கள் பண்ணியதை நீங்கள் பண்ணினால் இதோ இப்படித்தான் நடக்கும்.

பேசுங்க.. அதே நேரம் சொந்த புத்தியை பயன்படுத்தி பேசுங்க. நாம் பேசுறது சரியாக இருக்கிறதா, நியாயமா இருக்கிறதா என்பதை யோசிங்க.. அப்படி விஜய் என்ன சொல்லி விட்டார். குட்டி கதை கூறுகிறார். தமிழ்நாடு அரசியல் அடங்காத ஒரு காளை மாடு மாதிரி. அனுபவம் இல்லாத ஒரு புது கட்சியாக நாங்க வந்திருக்கிறோம். அனுபவத்தை பார்க்க வேண்டும். நோக்கத்தைப் பாருங்கள் என கூறுகிறார்.

மக்கள் பிரச்னை என்ன என்பது எங்களுக்கு புரியும். உங்களுக்காக நாங்க நிறைய செய்வோம். நம்பி ஓட்டு போடுங்க என்று தானே தெளிவாக கூறுகிறார். நீங்கள் முழு பேச்சையும் பார்த்து தானே கருத்து கூறுகிறீர்கள். இதில் தவறாக புரிந்து கொள்வதற்கான இடமே இல்லையே. உண்மையிலே விஜய் பேச்சைக் கேட்டு சின்ன பசங்க தப்பு பண்ணி விடக்கூடாதுன்னு அக்கறையில் பேசுகிறீர்கள் என பார்த்தால் அதுவும் இல்லை.

முழுக்க முழுக்க விஜய்யை தாக்க முதல் வீடியோ போட்டிருக்கிறார். இரண்டாவது வீடியோ தனி மனித தாக்குதல் என்பது தெளிவாக தெரிகிறது. சட்டப்படி தனி மனித தாக்குதல் என்பது தவறு. அது உங்களுக்கு நடந்தாலும் நான் கண்டிப்பேன்” என சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார்.