விஜய்க்கு பதிலடி தரனும்... துணைமுதல்வர் விழுப்புரம் வருகை: பொன்முடி அலர்ட் மெசேஜ்

1 year ago 7
ARTICLE AD

விழுப்புரம்:  துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் 5,6 தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். அப்போது அவருக்கு தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வரவேற்பளிக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி திமுக செயல்வீர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயல் வீரர்களுக்குகான கூட்டம் திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட அவை தலைவரும், செஞ்சி சட்டமன்ற உறுப்பினருமான மஸ்தான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கழகத் துணைப் பொதுச் செயலாளரும், வனத்துறை அமைச்சருமான க.பொன்முடி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அமைச்சர் பொன்முடி பேசுகையில்...

வருகின்ற 4 மற்றும் 6 தேதியில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார். அவருக்கு திண்டிவனத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். அதேபோல் தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ள தொகுதி பார்வையாளர்கள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பாக முகவர்களை நேரில் சந்தித்து இந்த மாதம் நடைபெற உள்ள வாக்காளர்கள் சேர்த்தல் நீக்கல் முகாமில் புதிய வாக்காளர்களை தீவிர காட்ட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் துணை முதலமைச்சர் வருகைக்கு எங்கேயும் கட்டவுட்டுகள் கட்ட வேண்டாம், கட்சி கொடி மட்டுமே கட்ட வேண்டும், ஒருசிலர் ஒரு வாரத்திற்கு முன்பாக பெரிய பெரிய கட்டவுட்டுகளை வைத்து நமது மாவட்டத்தில் சிலர் அலப்பறையில் ஈடுபட்டனர் என மறைமுகமாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை அமைச்சர் பொன்முடி சாடினார். அவருக்கு பதிலடி தரும் வகையில் வரவேற்பு இருக்க வேண்டும் என பேசினார்.

தமிழக வெற்றிக் கழகம்

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் அரசியல் மாநாடு நடத்தியது. அந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், பாஜக சித்தாந்த எதிரி என்றும் திமுக அரசியல் எதிரி என்றும் குறிப்பிட்டார்.

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் அரசியல் மாநாடு நடத்தியது. அந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், பாஜக சித்தாந்த எதிரி என்றும் திமுக அரசியல் எதிரி என்றும் குறிப்பிட்டார்.

'திமுக, பாஜக கட்சிகள் விஜய்க்கு எதிரான கருத்துகளை முன் வைத்து வருகின்றனர்'

பாசிம் குறித்து விஜய் பேசிய கருத்தும் சர்ச்சையானது. திமுக, பாஜக கட்சிகள் விஜய்க்கு எதிரான கருத்துகளை முன் வைத்து வருகின்றனர். விசிக தலைவர் தொல். திருமாவளவனும் விஜய்க்கு எதிராக கூறியிருந்தார். கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார். ஒரு வாரத்துக்கு மேலாகியும் தவெக மற்றும் விஜய் குறித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் அனல் பறந்து கொண்டிருக்கிறது. டிசம்பர் மாதம் நடைபெற உள்ள அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் திருமாவளவன் மற்றும் விஜய் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article