விஜய் பிறந்தநாள்: பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த தவெக தொண்டர் !

4 months ago 9
ARTICLE AD

மதுரையில் முதலமைச்சர் விஜயின் பிறந்தநளை முன்னிட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த பத்து பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த தவெக தொண்டர்.

தமிழக முதல்வரின் பிறந்தநாள்

தமிழக முதல்வர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட 'தாய்மாமன் திட்டத்திற்கு' முன்னோட்டமாக, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கிய தவெக தொண்டர் செயல்பாடு மதுரை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின்பு, முதன்முறையாக தனது பிறந்தநாளை இன்று (ஜூன் 22) கொண்டாடவிருக்கிறார் தமிழக முதலமைச்சர் விஜய். 'உச்ச நடிகர்' என்ற அடையாளத்தைத் தாண்டி, தமிழகத்தின் முதலமைச்சர் என்று வரலாற்றை மாற்றி எழுதியுள்ள முதல்வர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை, தமிழகம் முழுவதும் உள்ள தமிழக வெற்றிக் கழக தொண்டர்களும் ரசிகர்களும் மக்கள் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மதுரையில் பச்சிளம் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கி தவெக-வினர்.

தாய்மார்கள் நெகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் மூழ்கினர்.

மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தவெக தொண்டர் விக்கி என்பவர் ஜூன் மாதத்தில் பிறந்த பத்துக்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்கள் மற்றும் பேபி கிட் வழங்கினார் இதில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கோபிசென் பங்கேற்று மோதிரங்களை பச்சிளம் குழந்தைகளுக்கு அணிவித்தார். சட்டமன்ற உறுப்பினர் கோபிசன் குழந்தைகளைக் கையில் தூக்கி, முத்தமிட்டு, கொஞ்சி மகிழ்ந்து தங்க மோதிரங்களை அணிவித்தார். குழந்தைகளை தூக்கி கொஞ்சியதைக் கண்டு அங்கிருந்த தாய்மார்கள் நெகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் மூழ்கினர்.

'ஜனநாயகத் திருவிழாவாகக்' கொண்டாடுகிறோம்

சட்டமன்ற உறுப்பினர் கோபிசன்  தாய்மார்கள் முன்னிலையில் பேசும்போது...," மக்கள் விரும்பும் நம்முடைய முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தம்பி விக்கி 2009-ஆம் ஆண்டு முதல் இன்று வரை, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார். நம்முடைய தேர்தல் அறிக்கையில் ஒரு திட்டம் இருக்கிறது... அதுதான் 'தாய்மாமன் திட்டம்'. இத்திட்டத்தின்படி, தமிழகத்தில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று நாம் வாக்குறுதி கொடுத்திருக்கிறோம். அதற்கு ஒரு முன்னோட்டமாகவும், முன்னுதாரணமாகவும்தான் விஜய் நற்பணி மன்றக் காலத்திலிருந்தே இந்தத் திட்டத்தை நாங்கள் செய்து வருகிறோம். 'தாய்மாமன் திட்டம்' விரைவில் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்போது, தமிழகத்தில் பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களும் நிச்சயம் கிடைக்கும். தளபதியின் பிறந்தநாளை நாம் பணநாயகத்தை ஒழித்து, ஜனநாயகத்தை மீட்டெடுத்த 'ஜனநாயகத் திருவிழாவாகக்' கொண்டாடுகிறோம் என்றார்.

Read Entire Article