சென்னை தனியார் கல்லூரியில், உலக அளவிலான ஓவிய கண்காட்சி நடைபெற்றது. இந்த ஓவிய கண்காட்சியில், நடிகர் சிவகுமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

ஓவியர்களுக்கு இப்போது வேலைவாய்ப்பு கிடைக்கிறது

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது: நாங்கள் ஓவியக்கலை படித்த போது ஒரு வகுப்பில் இரண்டு பேருக்கு மட்டுமே அதிக அளவு திறன் இருக்கும். ஆனால் அவர்கள் இருவருக்கு கூட வேலை கிடைக்காது. ஆனால் இப்பொழுது மகிழ்ச்சியான விஷயத்தை சொல்லுகிறார்கள், ஓவியக்கலை உள்ளிட்ட கலைகளைப் படிப்பவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கிறது. குறைந்தபட்சம் 30 ஆயிரம் ரூபாய் முதல் பச்சம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பளத்தில் வேலை கிடைப்பதாக கூறினார்கள் இது தாங்க முடியாத இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.

நான் ஒரு காலத்தில் ஓவியக்கலை கற்றுக் கொண்டால் இந்தியாவில் பிச்சைதான் எடுக்க வேண்டும் என சொல்லிக் கொண்டிருந்தேன். நான் 6 ஆண்டுகள் ஓவியக்கலையை படித்திருக்கிறேன். ஓவியக் கலையை படிக்கும் போது நான் கல்யாணம் செய்து கொள்ள முடியாது வருமானம் இருக்காது, திருவண்ணாமலையில் தாடி வளர்த்துக்கொண்டு சாமியார் ஆகிவிடலாம் என நினைத்திருந்தேன். காலங்கள் மாறி ஓவியக் கலையில் இருந்து திரைப்படத்துறைக்கு சென்று நடிகனாக 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினேன்.

இங்கிருக்கும் மாணவர்கள் பெரும்பாலானோர் பெண்களாக இருக்கின்றார்கள். திரும்பம் பக்கமெல்லாம் பெண்களின் ஓவியம் உங்களை பார்க்கும் போது மனசுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஓவிய கலைஞர்களாக இருக்கும் அனைத்து பெண்களும் என்னுடைய பேத்தி வயது உடையவர்களாக இருக்கிறார்கள்.

விஜய் குறித்து முக்கிய கருத்து

எந்த தொழில்நுட்பம் வந்தாலும் ஓவியக்கலைக்கு பிரச்சனை இருக்காது. என்னை விட என்னுடைய அம்மா என்னுடைய தாத்தா, பாட்டி பெரியோர்கள் தான். எத்தனை ஏ.ஐ., வந்தாலும் ஒரிஜினலை ஒன்றும் செய்ய முடியாது. கைத்திறமை இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம்.

தற்போது புதிதாக விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார், விஜயின் அரசியல் வருகை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில், அவர் வந்தே ஆக வேண்டும் என மக்கள் நினைத்தால் வந்துவிடுவார் என தெரிவித்தார்