விஜய் அதிரடி முடிவு! சென்னை, திருச்சி: எந்த தொகுதியில் போட்டியிடுகிறார்? பரபரப்பு தகவல்!

1 month ago 2
ARTICLE AD

தமிழகத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த சில நாட்களில் தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கட்சிகள் தங்களது கூட்டணிகளை இறுதி செய்துள்ளன. மேலும், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையும் அந்தந்தக் கட்சியினர் தேர்வு செய்து வருகின்றனர். திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை இறுதி செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகம்

புதிதாகத் தொடங்கப்பட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் களமிறங்கியுள்ளது. வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் முக்கிய முகங்களை வேட்பாளர்களாகக் களமிறக்கவும் முடிவு செய்துள்ளது. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவராக இருக்கும் விஜய் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தின் நட்சத்திரத் தொகுதிகள்

இந்தத் தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியிலும் மீண்டும் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. இந்நிலையில், விஜய் சென்னை மற்றும் திருச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள இரண்டு தொகுதிகளில், போட்டியிட முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு

சென்னை பெரம்பூர் தொகுதியில் கிறிஸ்தவர்களின் வாக்குகள் அதிக அளவில் இருப்பதால், அதைத் தனக்குப் பலமான தொகுதியாக விஜய் கருதுகிறார். அந்தத் தொகுதியில் போட்டியிடுவது பாதுகாப்பாக இருக்கும் என அவர் உணர்வதாகவும் கூறப்படுகிறது. அதேவேளையில், கடந்த தேர்தலில் கமல்ஹாசன் தோல்வியைத் தழுவியது போல், ஒரு தொகுதியில் மட்டும் நின்று தோல்வி அடைந்தால் அது கட்சியின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்பதால், பாதுகாப்பிற்காகத் திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிட விஜய் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Entire Article