'விஜயுடன் கூட்டணியா?’ பரபரப்பாக பதில் அளித்த டிடிவி தினகரன்..!

3 months ago 5
ARTICLE AD

அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி,  அது வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் - டிடிவி தினகரன் பேட்டி

டிடிவி தினகரன் பேட்டி

மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் தங்க விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்...,” மோடி பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் NDA கூட்டணியில் இருந்தோம், நாடாளுமன்ற தேர்தல் வேறு சட்டமன்ற தேர்தல் வேறு என்பதால் வெளியேறனோம், 2006 சட்டமன்ற ல் தேர்தலில் விஜயகாந்த் ஏற்படுத்திய பாதிப்பு போல 2026 ல் விஜய் பாதிப்பு ஏற்படுத்துவார் என கூறினேன். தேவை இருந்தால் தான் டெல்லியில் உள்ள தலைவர்கள் யாரையும் சந்திப்பேன், விளம்பரத்திற்கு பூங்கொத்து கொடுக்க மாட்டேன், அது என் பழக்கம் இல்லை.

ஏன் வெளியேறினோம்

மூப்பனார் பெரிதும் மதிக்கும் தலைவர், மூப்பனார் பிறந்த நாள் நிகழ்ச்சி இருப்பது பின்னர் தான் தெரியும் அதில் அனைவரும் கலந்துகொண்டதும் தெரியும். எனக்கு அழுத்தம் இருப்பது தொண்டர்களும் மீடியாக்களும் தான்., யாரை எதிர்த்து எதனை எதிர்த்து கட்சி ஆரம்பித்தேன், அதற்கு எதிராக அவர்களோடு சேர்ந்துகொண்டு அப்படியெல்லாம் எம்.பி, எம்.எல்.ஏ ஆகும் கூட்டமல்ல நாங்கள். அவர்களோடு இருக்க விருப்பமில்லை அவரோடு. சட்டமன்றத்துக்கு செல்ல விருப்பமில்லை அண்ணாமலை இருந்தவரை கூட்டணியை சரியாக கையாண்டார் ஆனால் நயினார் நாகேந்திரன் சரியாக கையாளவில்லை, நான் NDA வில் வெளியேற யாரும் காரணமல்ல; என் தொண்டர்களின் விருப்பம் தான் கூட்டணி ஆட்சி எனவும், முதலமைச்சர் அதிமுகவை சேர்ந்தவர் என அமித்ஷா என்கிறார். நாங்கள் ஒருவரையும் அவருடன் சிலருடன் உள்ளவர்களை எதிர்த்து தொடங்கியது தான் அமமுக. தொண்டர்கள் , நிர்வாகிகள் ப்ரஷர், சிலர் ஆங்காங்கே பேசும்போது பேயாட்டம் ஆடுகிறார்கள், திருந்தவே திருந்தாது என NDAவில் வெளியேறினோம். ரூம் போட்டுலாம் யோசிக்கல, தொண்டர்கள் தான் எனக்கு முக்கியம், நயினார் காரணம் இல்லை, கூட்டணி அமைத்தவர்கள் காரணமில்லை, அவர்களுக்காக நாங்கள் தேவையில்லை என கூட நினைத்திருக்கலாம்

செங்கோட்டையன் குறித்து கேள்விக்கு:-

அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைவது அம்மாவின் கட்சிக்கு நல்லது. அங்குள்ள தொண்டர்கள் அதனை யோசிக்கவில்லை என்றால் அம்மாவின் ஆட்சி அமைவது கடினம். செங்கோட்டையன் இப்போது பேசுகிறார் என்கிறார்கள், அதற்கு ஏதாவது காரணமாக இருக்கலாம் எனவும். ஆட்சி அமைக்க போற கூட்டணியில் நாங்கள் இருப்போம், விவாத நிகழ்ச்சிகளில் எங்கள் மீது சிலர் நஞ்சை உமிழ்கிறார்கள். பொறுமையாக இருங்கள் பல வாய்ப்பு உள்ளது உருவாகும், வெற்றிபெறும் கூட்டணியில் அமமுக இருக்கும் . நண்பர்கள் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும், எப்போது சேர்வோமோ? அப்போது சேர்வோம்;  ஸ்லிப்பர் செல்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியேருவார்கள், அவர்கள் அண்ணன் தம்பிகள் தான் நிச்சயம் வருவார்கள்.

NDAவில் அமமுகவிற்கான இடர்பாடுகள் கலையும் பட்சத்தில் தான் அமமுக NDAவில் இணையும்

அண்ணாமலை எங்களை கூட்டணிக்கு கொண்டுவந்தார், நயினார் நல்ல நண்பர் அண்ணாமலைக்கு எனக்கும் நல்ல நட்பு. அவர் வெளிப்படையாக இருந்தார், அண்ணாமலையின் முயற்சியில்த தான் கூட்டணியில் இருந்தோம். அண்ணாமலை நீக்கப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது, அமமுகவிற்கு சரியாக இருக்காதே என நினைத்தோம். அமித்ஷா ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் முயற்சி தோல்வி அடைந்ததற்கு காரணம் நாங்கள் அல்ல. இப்போது நாங்கள் விலக நாங்கள் காரணமல்ல விலக முடிவு எடுப்பதற்கு மாநில தலைவரின் செயல்பாடாக இருக்கலாம், ஓபிஎஸ்சுடன் பாஜக மாநில தலைவர் பேசியது மன வருத்தத்தை ஏற்படுத்தியது, பன்னீர்செல்வம் விவகாரத்தில் மாநில்தலைவர் பேசியது அப்பட்டமான பொய், அவருக்கு நடந்தது எனக்கும் நடக்கும். நாங்கள் சிறியவர்கள், பெத்தவர்கள் வந்துவிட்டார்கள் என இருக்கின்றனர் அவர்கள். நான் எத்தனையோ ரெய்டு, கைதை பார்த்து வந்தவன்; 20 ஆண்டுகள் சிறையில் இருந்தாலும் வெளியில் வந்து அரசியல் பண்ணுவேன், அண்ணாமலை என்னுடன் கூட்டணியில் வெளியேறியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும என பேசினார்.

கூட்டணி குறித்த கேள்விக்கு

நாங்கள் ஓன்றுபட வேண்டும் எங்களை டெல்லியில் வைத்து சமாதானம் பேசலாம் என கனவுகான வேண்டாம் . இப்போது NDAவில் கூட்டணியில் நாங்கள் இருந்தால் பொறுந்தா கூட்டணியாக அமைந்துவிடும். கூட்டணியில் இருப்பது குறித்து புரிய வேண்டியவர்களுக்கு புரியும், எதற்காகவும், யாருக்கும் அடி பணிய மாட்டேன். நாங்கள் சேரும் கூட்டணி உறுதியாக ஆட்சியமைக்கும், அதில் முதல் தேர்வு NDA கூட்டணிதான், அதனை அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் நல்ல முடிவு எடுக்க வேண்டும். அம்மாவின் தொண்டர்கள் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும், உங்களை அழைத்துக்கொண்டு சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய இயலும், தற்கொலை செய்துவிட்டா கொள்கையில் இருக்க முடியும்.

விஜயுடன் கூட்டணி

நாங்கள் இடம்பெறும் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும்,  திமுகவுடனும், சீமானுடன் கூட்டணி இல்லை,  அரசியலில் எதுவும் நடக்கும், புதிய கூட்டணி அமையும் , விஜயுடன் போனால் என்னால் என்ன? அவரின் தலைமை தாங்க கூடாது என நினைக்க கூடாதா?  விஜயை குறைத்து பேசக்கூடாது  அரசியலில் புதிதாக இருக்கலாம், அரசியலில் எம்.ஜிஆரை விட சீனியர்கள் அவருடன் இணைந்தார்கள், விஜயை குறைத்து பேச வேண்டாம். செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி, நல்ல சீனியா், MGR கால மூத்த நிர்வாகி அவர் முயற்சி நல்ல முயற்சி அது வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன், தேவைப்பட்டால் அவருக்கு உதவியாக அம்மாவின் தொண்டர்கள் நாங்கள் இருப்போம். அம்மாவின் தொண்டர்கள் கையில் தான் முடிவு , இப்போதும் நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும், இப்போதும் அமைதி காத்தால் நல்லதல்ல என்றார்.

Read Entire Article