காஞ்சிபுரம் மாநகரில் உள்ள பிரசித்தி பெற்ற சக்தி பீடங்களில் முதன்மையாக விளங்கக்கூடிய காமாட்சி அம்மன் கோவில் இன்று அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருகை தந்து வருகிறேன் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோகமாக வெற்றி பெற வேண்டி சிறப்பு பிரார்த்தனை மற்றும் வேண்டுதல் வைத்து சாமி தரிசனம் செய்தனர். இதன்பின் காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கத்தீஸ்வரர் கோவிலில் நெய் விளக்கேற்றி தீபாராதனை செய்து முன்னாள் அமைச்சர் வேண்டுதல் வைத்தனர், இதனைத் தொடர்ந்து வரதராஜ பெருமாள் கோவில் சென்று சாமி தரிசனம் செய்ய மேற்கொண்டார்.

கூட்டணி குறித்து விளக்கி கூறிய ராஜேந்திர பாலாஜி

சாமி தரிசனம் செய்த பின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தபோது: என்.டி.ஏ கூட்டணியில் விஜய் வருவது உங்களைப் போன்ற தகவலாக தான் நானும் பார்க்கிறேன், உறுதியான செய்தி எதுவும் வரவில்லை. திமுகவை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை கருத்தோடு யார் வந்தாலும் கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி தயாராக உள்ளார், வருபவர்கள் உண்மையாக திமுகவை எதிர்ப்பவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் ஒன்றை கொள்கை என தெரிவித்தார்.

பிஜேபி ஆளுகின்ற வட மாநிலத்தில் எரிவாயு தட்டுப்பாடு என்பது இல்லை, எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலத்தில் மட்டும்தான் செயற்கையாக பஞ்சத்தை உருவாக்கி மத்திய அரசின் மீது பழியை போடுவதற்கு போராடுகிறது திமுக. எரிவாயு தட்டுப்பாடு என்பது பொய். போர் நடைபெற்றால் அனைத்து நாடுகளிலும் விலைவாசி உயரம், அத்தியாவசிய பொருள் தட்டுப்பாடு நடைபெறுவது சகஜம் என தெரிவித்தார்.

திமுக மாநாடு தோல்வி

திமுக மாநாடு சலசலப்பாகி, பிசுபிசுப்பாக ஆகியது, திமுக மாநாட்டில் முன்பு நடைபெற்ற கூட்டம் விட எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை, திமுக மாநாடு தோல்வி அடைந்தது. பாரத பிரதமர் மோடி பங்கேற்ற திருச்சி மாநாடு வல்லமை படைத்த மாநாடாக நடைபெற்றது, நரேந்திர மோடி மற்றும் எடப்பாடி கூட்டணி அற்புதமான ஆன்மீக கூட்டணி, தெய்வீகமான கூட்டணி, தேச நலனுக்காக கூட்டணி நிச்சயம் வெல்லும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.