விஜயதசமியையொட்டி இன்று மதுரை சாரதா வித்யாவனம் மெட்ரிக் பெண்கள் மேல்நிலை பள்ளியில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி - யாகம் வளர்த்து, வேத மந்திரங்கள் சொல்லி அரிசியில் குழந்தைகளை எழுத வைத்தனர்.

முதன்முதலாக கல்வி கற்க குழந்தைகளை ஆர்வமுடன் அழைத்து வந்த பெற்றோர்கள்.

நவராத்திரியில் முப்பெருந்தேவிகளின் பூஜைகள் முடிந்த பின்பு, பத்தாவது நாளான விஜயதசமியன்று தொடங்கப்படும் இந்த நாளில் எந்த ஒரு காரியமும் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. குழந்தைகள் கல்வி கற்கத் தொடங்கும் நாளை வீடுகளில் புனிதமாகக் கொண்டாடும் நாள்தான் விஜயதசமி. கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் வெற்றியடையும் என்பார்கள். மழலைக் குழந்தைகளை

பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள், நடனம் ஆகிய பயிற்சிகள், பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்குவதும் வழக்கம். மங்களகரமான விஜயதசமி நாளான இன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யப்படுகிறது.

சாரதா வித்யாவனம் மெட்ரிக் பெண்கள் மேல்நிலை பள்ளி

இந்நிகழ்ச்சியில் மதுரை சாரதா வித்யாவனம் மெட்ரிக் பெண்கள் மேல்நிலை பள்ளியில் குழந்தையின் சுட்டுவிரலை பிடித்து தட்டில் உள்ள அரிசியின் மேல் தங்கள் தாய் மொழியின் எழுத்தை, ஓம் என்ற எழுத்தை எழுத வைத்தார்கள். முன்னதாக வேதாச்சாரியார்கள் யாகம் வளர்த்து, வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்தனர். ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆர்வமுடன் அழைத்து வந்திருந்தனர்.