விஜயகாந்த் குறித்து பேச்சு.. மேடையில் கண்ணீர் விட்டு அழுத பிரேமலதா! காரணம் என்ன?

9 months ago 8
ARTICLE AD

திண்டுக்கல், நாகல்நகர் பகுதியில் தேமுதிக சார்பில் உலக மகளிர் தின விழா கட்சி கொடி  வெள்ளி விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா  என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுகூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், பல முறை திண்டுக்கல் வந்துள்ளேன். திண்டுக்கல் என்றாலே அது கேப்டனின் கோட்டை. திண்டுக்கல்லுக்கு விஜயகாந்த் உடன் எப்போது வந்தாலும் மக்கள் வெள்ளத்தில் தான் சென்றுள்ளோம். தேர்தல் நேரத்திலும், பிரச்சாரத்திலும் கூட்டத்திற்கு சென்றாலும்.

விஜய்காந்த் எங்கும் செல்லவில்லை நம்முடன் தான் இருக்கிறார்.விஜய்காந்த் மறைந்த போது கருடன் வட்டம் மிட்டது அதே போல விஜய்காந்த் நினைவகத்தில் தினமும் கருடன் வட்டம் மிடுகிறது.திண்டுக்கல் என்றாலே பூட்டு மற்றும் பிரியாணி தான். இரண்டும் உலகம் முழுவதும் சென்று அடைந்துள்ளது.

நமது கொடி கலரில் உள்ள சிவப்பு சாதி மதம் இல்லாமல் நமது இரத்ததின் கலரை குறிக்கிறது. மஞ்சள் ஏழைகள் இல்லாத நிலை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கிறது.கருப்பு லஞ்சம், ஊழல், பெண் எதிரான குற்றத்தை தடுத்து நமது முடியின் நிறத்தை விஜய்காந்த் கொடுத்தார்.சொல் ஒன்று செயல் ஒன்று என தலைவருக்கு தெரியாது ஒன்றை சொன்னால் அதன்படி நிற்பவர் தான் தலைவர். என் மொழி தமிழ் மொழி, தமிழ் மொழியில் மட்டுமே நடிப்பேன் என உறுதியாக இருந்து வாழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த்.திரைத்துறையில் எத்தனையோ பேரை நாம் பார்க்கிறோம். சொல் ஒன்று செயல் ஒன்றாக செய்து வருகின்றனர். மேடைக்கு மேடை பேசுவார்கள் ஆனால் நடிப்பார்கள் ஆனால் விஜயகாந்த் மட்டுமே சொன்னபடி வாழ்ந்து காட்டினார்.

கொக்கோகோலா, நகை கடை போன்ற பல விளம்பரங்கள் விஜயகாந்த் தேடி வந்தது. ஆனால், தவறான வழியில் எனது மக்களே என்றைக்கும் கொண்டு செல்ல மாட்டேன் எனக் கூறி வந்த விளம்பரங்களில் எல்லாம் நடிக்க மறுத்தார். தலைவரே சொல்லிட்டார் ஆகையால் நல்லதாகத்தான் இருக்கும் என மக்கள் எண்ணிவிடுவார்கள். தவறான வழியில் அவர்களை வழிநடத்த கூடாது என்பதால் எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என கூறினார்.

ஆனால் ஒரு சிலர் பணத்திற்காக விளம்பரங்களில் நடித்து வருகின்றனர் என மறைமுகமாக நடிகர் விஜய் சாடினார். விஜய்காந்த் ஒரு வயதில் தாயை இழந்தவர். அவருக்கு நான் தாயாக இருந்தேன். அவரை பேபி என அழைப்பேன். அவருக்கு அனைத்தும் நானே, எனக்கு எல்லாம் அவரே. அவருக்கு நான் தான் சாப்பாடு ஊட்டி விடுவேன். நடித்து முடித்து எத்தனை மணிக்கு வந்தாலும் இரவு முழுவதும் இருந்து சூடாக உணவு கொடுத்து தான் உறங்க செல்வேன். என அவரைப் பற்றி பேசும்போது பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் விட்டு அழுதார்.

நாம் ஆளும் கட்சி இல்லை. ஆண்ட கட்சியும் இல்லை. நோட்டை எடுத்து கொண்டு மிரட்டி பணம் வாங்கும் கட்சியா? இருந்தும் இன்று திண்டுக்கல் முழுவதும் நமது கொடியாக உள்ளது. விஜய்காந்த் பெண்களுக்காக பல உதவிகளை செய்தவர். மக்கள் விஜய்காந்த் தவற விட்டுவிட்டனர். அவர் பணம் புகழ் எல்லாம் இருந்தது மக்களுக்காக வாழ நினைத்தார். விஜய்காந்த் வெள்ளந்தியாக இருந்தார். அவரை நாம் தவற விட்டு விட்டோம். என பேசினார்.

Read Entire Article