விசா இல்லா வசதி... ஆனால் இத்தனை சிக்கல்களா? வியட்நாம் செல்லும் இந்தியர்கள் கவனத்திற்கு!

1 week ago 2
ARTICLE AD

இந்திய சுற்றுலாப் பயணிகளிடையே வியட்நாமின் 'பு குவோக்' தீவு மிகவும் பிரபலம். அங்கு இந்தியர்களுக்கு 'விசா இன்றி' நுழையும் சலுகை வழங்கப்படுவதால், பலர் ஆர்வத்துடன் செல்கின்றனர். ஆனால், இந்த சலுகையை நம்பி மட்டும் செல்வது ஆபத்தானது என வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகம் எச்சரித்துள்ளது.

விசா இல்லா நுழைவின் கட்டுப்பாடுகள்

பு குவோக் தீவிற்கு விசா இன்றி செல்லும் இந்தியர்கள், அந்தத் தீவில் மட்டுமே தங்கியிருக்க முடியும். ஹோ சி மின் சிட்டி அல்லது ஹனோய் போன்ற வியட்நாமின் பிற பகுதிகளுக்குச் செல்ல வேண்டுமானால், அவர்களிடம் முறையான 'வியட்நாம் விசா' இருப்பது கட்டாயம். விசா இல்லாமல் மெயின்லேண்ட் பகுதிகளுக்குச் சென்றால் கடுமையான சட்டச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.

Indian nationals travelling to Viet Nam are requested to see this ADVISORY 👇🏽 pic.twitter.com/UI1fTfbjuB
— India in Vietnam (@AmbHanoi) April 6, 2026

எதிர்பாராத நெருக்கடிகளில் சிக்கல்

திடீர் மருத்துவ அவசரநிலை, விமான ரத்து அல்லது அவசரத் தேவை காரணமாகத் தீவை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டால், விசா இல்லாத இந்தியர்கள் பெரிய சிக்கலுக்கு உள்ளாவார்கள். எனவே, திட்டமிடப்பட்ட பயணமாக இருந்தாலும், ஒரு முறையான 'வியட்நாம் விசா'வை முன்கூட்டியே பெற்றுக்கொள்வது சிறந்தது என தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

கடவுச்சீட்டு (Passport) தொலைந்தால் ஏற்படும் சிக்கல்கள்

பயணத்தின் போது கடவுச்சீட்டு தொலைந்துவிட்டால், உடனடியாக அந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். அதன் பிறகு, ஹனோய் அல்லது ஹோ சி மின் சிட்டியில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகத்தை அணுகி தற்காலிக பயண ஆவணங்களைப் பெற வேண்டும்.

இருப்பினும், இந்தியத் தூதரகம் ஆவணங்களை வழங்கினாலும், வியட்நாமிய அதிகாரிகளிடமிருந்து 'வெளியேறுவதற்கான அனுமதி' (Exit Permit) பெற வேண்டும். இதற்கு பொதுவாக 3 முதல் 5 வேலை நாட்கள் ஆகும். இந்த நாட்களில் பயணிகள் வியட்நாமை விட்டு வெளியேற முடியாது.

தூதரகத்தின் அறிவுரை: பயணத் திட்டங்களில் திடீர் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், எவ்வித அசௌகரியமும் இன்றி உங்கள் பயணத்தை மேற்கொள்ள, முன்கூட்டியே தகுந்த விசா எடுத்துச் செல்வது பாதுகாப்பானது.

Read Entire Article