வானில் பறப்பதற்கு முன் குறைந்த விலையில் சாப்பாடு – கோவை விமான நிலையம் ஸ்மார்ட் அப்கிரேடு...

1 month ago 7
ARTICLE AD

கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்காக Udaan Yatri Cafe  திறக்கப்படவுள்ளதாக விமான நிலைய இயக்குநர் முகமது ஆரிஃப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  கோவை விமான நிலையத்தில் நாள்தோறும் இண்டிகோ, ஏர் இந்தியா, ஏர்விஸ்டா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.  டெல்லி சென்னை பெங்களூரு, அகமதாபாத் சிங்கப்பூர் ஷார்ஜா உள்ளிட்ட நகரங்கள் கோவையிலிருந்து இணைக்கப்படுவதாக முகமது ஆரிஃப் தெரிவித்தார்.பயணிகளுக்கான சேவையை மேம்படுத்தும் வகையில் விமான நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

மலிவு விலையில் சிற்றுண்டி

இதனை தொடர்ந்து விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் வசதிக்காக மலிவு விலையில் சிற்றுண்டி வழங்கும் வகையில் udan yatri cafe திறக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.  மகளிர் சுய உதவி குழுக்களை கொண்டு தரமான உணவுகள் மலிவு விலையில் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதுமட்டுமின்றி, சிறுவர்களுக்கான விளையாட்டு பகுதி, நூலகம் துவங்கப்படவுள்ளது.  இதனை, மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு, இணை அமைச்சர் முரளிதர் மோகல் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டு  துவக்கி வைக்க உள்ளனர். இந்த வசதிகளை காணொளி வாயிலாக பிற விமான நிலையங்களிலும் துவக்கி வைக்கவுள்ளதாக விமான நிலைய இயக்குநர் முகமது ஆரிஃப் தெரிவித்தார்.

Read Entire Article