வாட் ப்ரோ! பாஜகவில் நேற்று ஒரு ரூல், இன்று ஒரு ரூலா…ஆனால் நயினார் நாகேந்திரன் ஹேப்பி!

8 months ago 7
ARTICLE AD

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும் அதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டன.  தமிழ்நாட்டை பொறுத்தவரை கூட்டணி ஆட்சிதான், ஆட்சி அமைக்க சாதகமான சூழல் இருப்பதாக பார்க்கப்படும் நிலையில், கூட்டணி குறித்து பேச்சுவார்ததையானது தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக எதிர்க்கட்சியினர் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையானது தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக அதிமுக-பாஜக கூட்டணியானது உறுதியாகிவிட்டது. அதை அதிகாரப்பூர்வமாக பாஜக தலைவர் அமித்ஷாவும், அதிமுகதலைவர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக தெரிவித்து விட்டனர்.

அதிமுக - பாஜக கூட்டணி:

திமுக கூட்டணியில், தற்போது இருக்கின்ற கூட்டணியே, 2026 தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிமுகவுடனான கூட்டணியில் யார் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. அதிலும், அதிமுக – பாஜக கூட்டணி உருவாகுமா என்ற பேச்சானது, தமிழ்நாட்டு அரசியலில் , சமீப தினங்களாக  பெரிதும் பேசபட்டது. சில தினங்களுக்கு முன்பு, அதிமுக மூத்த தலைவர்களான இபிஎஸ், எஸ்.பி. வேலுமணி ,செங்கோட்டையன் உள்ளிட்ட தலைவர்கள் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்திப்பதுமான நிகழ்வும் நடந்தது. அப்போது, அண்ணாமலையை தமிழக பாஜக தலைமையில் இருந்து மாற்றினால்தான், பாஜகவுடன் கூட்டணி என இபிஎஸ் உறுதியாக தெரிவித்ததாக கூறப்பட்டது. இதையடுத்துதான், அதிமுகவுடனான கூட்டணிதான் முக்கியம் என்றும், அதன் காரணமாக அண்ணாமலையை மாற்ற பாஜக தலைமை முடிவெடுத்ததாகவும் தகவல் வெளியானது.

நேற்றைய பாஜகவின் விதிமுறை:

இந்நிலையில், தமிழக பாஜக மாநில தலைவருக்கான தேர்தல் குறித்தான அறிவிப்பும் வெளியானது. நேற்றைய தினம் பாஜக மாநில தலைவருக்கான, விருப்ப மனு பெறப்படுகிறது என்றும் அதற்கான விதிமுறைகளையும், தமிழ்நாடு பாஜக வெளியிட்டது. அதில் தெரிவிக்கப்பட்டதாவது, தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள்,  இன்று ( ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை மதியம் ) 02.00 மணி முதல் மாலை 4 மணி வரை  விருப்ப மனுவை மாநிலத் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டது. மேலும், போட்டியிட மனு தாக்கல் செய்ய உள்ளவர்கள், மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது பத்து வருடங்கள் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவார். இவரை கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேர் அவரிடம் இருந்து எழுத்து பூர்வமான ஒப்புதல் பெற்று பரிந்துரைக்க வேண்டும் என விதிகளையும் மாநில தேர்தல் அதிகாரியான சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

மாநில தலைவராகும் நயினார் நாகேந்திரன்:

இந்நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், பாஜக கட்சியின் எம்.எல்.ஏ-வாக உள்ள நயினார் நாகேந்திரன் மட்டும் பாஜக மாநில தலைவருக்கான பதவிக்கு மனுதாக்கல் செய்துள்ளார். இதையடுத்து, நயினார் நாகேந்திரன் மாநில தலைவராக பொறுப்பேற்கவுள்ளதும் உறுதியானது. ஆனால், பலருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. அது என்னவென்றால், நேற்று வெளியிடப்பட்ட தமிழ்நாடு பாஜக மாநில தேர்தலுக்கான விதிமுறைகளில், குறைந்தது 10 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்பது தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நயினார் நாகேந்திரனோ, பாஜகவில் இணைந்து 9 ஆண்டுகள்தான் ஆகின்றன. இந்நிலையில், எப்படி இவர் தேர்வு செய்யப்படுகிறார் என்ற பேச்சுகள் எழ ஆரம்பித்தன.

பாஜகவின் இன்றைய விதிமுறை:

இதையடுத்து, தமிழ்நாடு பாஜக தலைவரை மாற்றம் செய்வற்காக, இன்று சில மணி துளிகளில் தேர்தல் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் சுமார் 9 ஆண்டுகள் மட்டும் பாஜகவில் இருப்பதாக கூறப்படும் நயினார் நாகேந்திரன், 10 ஆண்டுகளை நிறைவு செய்யாத போதிலும், தலைவர் பதவிக்கு தகுதி பெற்றிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இதுபோன்று, ஆந்திரா, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜக மாநில தேர்தல்களில் மாற்றம் கொண்டுவரபட்டதாக தேர்தல் அதிகாரியான சத்யமூர்த்தி, தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று ஒரு விதிமுறை, இன்று ஒரு விதிமுறை என கட்சியிலேயே, இப்படி மாற்றம் செய்யப்படுகிறதே என பலரும் பேசி வருவதை பார்க்க முடிகிறது.  மேலும், பாஜக கட்சியானது விதிகளின்படியெல்லாம் செயல்படாது என்றும் இவர்கள் செயல்பாடுதான் விதிகள் என்றும் செயல்படுவார்கள் என எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Read Entire Article